முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டுவளர்ச்சித்துறை சார்பாக சமுதாய அடிப்படையிலான குழுக்களுக்கு பயிலரங்கம்: கலெக்டர் சி.கதிரவன் பங்கேற்பு

செவ்வாய்க்கிழமை, 23 மே 2017      கிருஷ்ணகிரி
Image Unavailable

கிருஷ்ணகிரி மாவட்டம், வெற்றிவேல் மஹாலில் பட்டு வளர்ச்சித்துறையின் சார்பில் சமுதாய அடிப்படையிலான குழுக்களுக்கான பயிலரங்கம் நடைபெற்றது.

பயிலரங்கம்

இதில் பட்டுவளர்ச்சித்துறை உதவி இயக்குநர் எஸ்.வீரராகவன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். கலெக்டர் சி.கதிரவன் தலைமையுரை நிகழ்த்தி சிறப்பாக செயல்பட்ட பட்டுககுழுகளுக்கு முதல் மூன்று பரிசுகளையும், பட்டு விவசாயக்குழு ஊக்குநர்களுக்கு ஆறுதல் பரிசுகளையும் வழங்கினார். இவற்றில் மண்டல இணை இயக்குநர் எம்.ராஜசேகர், உதவி இயக்குநர்கள் (வித்தகம்) செல்லப்பா, ஆர்.ரவிக்குமார், ஆர்.எஸ்.ஆர்.எஸ் விஞ்ஞானி ஜே.ராஜ்குமார், முன்னோடி வங்கி மேலாளர் ஜி.பாஸ்கர், நபார்டு பொது மேலாளர் நஸ்ரின் சலீம் உள்ளிட்டோர் வளர்ச்சி நலத்திட்டங்கள், குழு அமைத்தலின் நோக்கம், வெண்பட்டு உற்பத்தியல் புதிய தொழில்நுட்பங்கள், வங்கிகடன் உதவிகளின் பங்கு குறித்து கருத்துரைகளை பட்டுகுழு விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்கள்.

கலெக்டர் சி.கதிரவன் பேசியதாவது.

தமிழக அரசு பட்டு வளர்ச்சி துறையின் மூலம் விவசாயிகளுக்கு மானியங்களையும், சிறந்த தொழில் நுட்பங்களையும் வழங்கி வருகிறது. இந்த முறைகளை பின்பற்றும் பொழுது விவசாயிகளுக்கு நல்ல விளைச்சலும், போதிய வருமானமும் கிடைக்கிறது. அதை விவசாயிகள் குழுக்களை அமைத்து பட்டு வளர்ப்பில் ஈடுபட வேண்டும். அப்பொழுதுதான் அரசின் திட்டங்களை பெறுவதற்கு வாய்ப்புகள் ஏற்படுகிறது. விவசாயிகள் பருவகாலத்திற்கு தகுந்தவாறு உரிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் பொழுதும், பட்டு நாற்று செடிகள் போதிய இடைவெளியுடன் நடவு செய்யும் பொழுதும், அதன் இலைகள் தரமாகவும், பெரியதாகவும் பட்டு உற்பத்திக்கு ஏற்ப இலைகள் கிடைக்கும், இதனால் பட்டு நூல் அதிகமாகவும் விவசாயிகளுக்கு இலாபமும் அதிகரிக்கும். சமூதாய அடிப்படையிலான குழுக்கள் மற்றும் சுய உதவி குழுக்கள் ஒருங்கிணைந்து பட்டு நூற்பு உற்பத்தி செய்ய முன்வரவேண்டும்.

அதற்காகத்தான பட்டு உற்பத்தியில் குழுக்கள் அமைத்து சிறப்பாக செயல்படும் விவசாயிகளுக்கு ஊக்குவிக்கும் வகையில் பரிசுகள் வழங்கப்படுகிறது என கலெக்டர் சி.கதிரவன் பேசினார்.இப்பயிலரங்கில் பட்டுவளர்ச்சித்துறை உதவி ஆய்வாளர் செல்வி.ஜி.ஜி. சுபாஷ்னி, ஆய்வாளர் எம்.கருணாநிதி, தொழில்நுட்ப உதவியாளர் கோபாலகிருஷ்ணன், பட்டு வளர்ச்சி துறையின் தொழில் நுட்ப பணியாளர்கள் மற்றும் பட்டு வளர்ப்பு விவசாயிகள் பலர் கலந்துக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்