முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2015-16 -ம் ஆண்டு பயிர் பாதிப்புக்கு ரூ.404 கோடி இழப்பீட்டு தொகையாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது - தமிழக அரசு தகவல்

செவ்வாய்க்கிழமை, 23 மே 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : 2015-16 -ம் ஆண்டில் ஏற்பட்ட பயிர் பாதிப்புக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.403.79 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பங்குத் தொகை

தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், 2015-2016-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் 10.14 இலட்சம் விவசாயிகள் பதிவு செய்யப்பட்டனர். அதற்காக, காப்பீட்டு கட்டண மானியத்தில் மாநில அரசின் 50 சதவீத பங்குத் தொகையாக, 51.46 கோடி ரூபாய் நிதியை இந்திய வேளாண் காப்பீட்டுக் கழகத்திற்கு விவசாயிகளின் நலன் கருதி தமிழக அரசு வழங்கியது.

ரூ.168.66 கோடி

2015-2016-ம் ஆண்டில் சம்பாப் பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்  பாதிப்படைந்தது.  அதில் பயிர்க் காப்பீடு செய்து, மகசூல் குறைவால் பாதிக்கப்பட்ட, 2.96 இலட்சம் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 403.79  கோடி கணக்கிடப்பட்டது. இதில், மாநில அரசின் பங்காக ரூபாய் 168.66 கோடி நிதியினை இந்திய வேளாண் காப்பீட்டுக் கழகத்திற்கு தமிழக அரசு விடுவித்தது.

22 மாவட்டங்களில் ...

இதனைத் தொடர்ந்து, நேற்று 22 மாவட்டங்களில் உள்ள 2,96,550 விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகையாக 403.79  கோடி ரூபாய், சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு மின்னணு மாற்றம் மூலம் விடுவிக்கப்பட்டுள்ளது.  இந்தத் தொகை ஓரிரு நாட்களில் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். 

நாகப்பட்டினத்திற்கு அதிகம்

குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.205.5 கோடியும், திருவாரூர் மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.101.70 கோடியும், கடலூர் மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.45.15 கோடியும், திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.25.387 கோடியும், சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.8.105 கோடியும், காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.5.262 கோடியும், இராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.3.726 கோடியும், விருதுநகர் மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.2.54 கோடியும், திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.2.5 கோடியும், தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.1.42 கோடியும் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. 

முதல்வர்  எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில், வேளாண்மைத் துறை மேற்கொண்ட தொடர்முயற்சிகளின் பயனாக, தமிழக விவசாயிகளுக்கு இந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago