Idhayam Matrimony

திருச்செந்தூர் பகுதியில் ஆர்டிஓ கணேஷ் குமார் தலைமையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு: 9 வாகனங்களுக்கு அனுமதி நிறுத்தி வைப்பு

செவ்வாய்க்கிழமை, 23 மே 2017      தூத்துக்குடி
Image Unavailable

 

திருச்செந்தூர் பகுதியில் உள்ள பள்ளி வாகனங்களை போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் 48 பள்ளிகளை சேர்ந்த 138 வாகனங்களை ஆய்வு செய்யப்பட்டதில் 21 தகுதியிழப்பு செய்யப்பட்டது. 9 வாகனங்களுக்கு தகுதிசான்று இல்லாததால் அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அனுமதி மறுப்பு

 

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்பு வரும் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்ககப்பட உள்ளன. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் உத்தரவு படி மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. முதற் கட்டமாக தூத்துக்குடி பகுதியில் உள்ள வாகனங்களை போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதனைதொடர்ந்து திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட திருச்செந்தூர், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்கு உள்பட்ட 48 பள்ளிகளை சேர்ந்த 138 வாகனங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.

திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா மெட்ரிக் பள்ளி முன்பு உள்ள மைதானத்தில் வாகனங்கள் ஆய்வு நேற்றுகாலை துவங்கியது. திருச்செந்தூர் ஆர்.டி.ஒ., கணேஷ்குமார் தலைமையில் ஆய்வு பணி நேற்றுகாலை துவங்கியது. தொடர்ந்து போலீஸ் டி.எஸ்.பி. தீபு திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சக்திவேலு, மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் பாத்திமா பர்வீன், மாவட்ட கல்வி அலுவலக ஆய்வாளர் தர்மராஜன் ஆகியோர் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர். பள்ளி வாகனங்களில் வேக கட்டுபாட்டு கருவி சோதனை மூலம் 50 கி.மீ., வேகத்தில் செல்வதற்கான சான்று, வாகனங்களில் மாணவ, மாணவிகள் வசதியாக ஏறும் வகையில் 120 செ.மீட்டலிருந்து 150 செ.மீ.,க்குள் இருத்தல், வாகனங்களில் ஜன்னல் 5 செ.மீ., மட்டும் இருக்கும் வகையில் கம்பி அமைத்தல், வாகனங்களில் தளம் சரியாக இருத்தல் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டன. இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் சக்திவேல் கூறுகையில், திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்டப்ட 48 பள்ளிகளை சேர்ந்த 138 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இவற்றில் பள்ளி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து ஆய்வு செய்யப்பட்டன. பள்ளி வாகனங்களின் வேகம், வாகனத்தில் தள குறைபாடுகள், ஜன்னல் பாதுகாப்பு, அவசர காலத்தில் வெளியேறும் அவசர கதவு திறப்பது குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டன. இவற்றில் 21 பள்ளி வாகனங்கள் தகுதியிழப்பு செய்யப்பட்டன. 9 வாகனங்களுக்கு தகுதி சான்று இல்லாததால் அவற்றின் அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்