முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடைக்கானல் அகில இந்திய செஸ் போட்டி சென்னை சையது அன்வர் சாம்பியன்

செவ்வாய்க்கிழமை, 23 மே 2017      திண்டுக்கல்
Image Unavailable

     கொடைக்கானல்- கொடைக்கானலில் நடந்த அகில இந்திய அளவிலான தரவரிசை செஸ் போட்டியில் சென்னை ஐ.சி.எப். ஐ சேர்ந்த சையதுஅன்வர் சாலி 7 புள்ளிகளுடன் சேம்பியன் பட்டம் பெற்றார்.
 கொடைக்கானல் செயின்ட் பீட்டர்ஸ் சர்வதேச பள்ளியில் முதலாம் முறையாக அகில இந்திய அளவிலான தரவரிசை செஸ் போட்டி நடந்தது. இந்த போட்டியில் 248 போட்டியாளர்கள் இந்தியா முழுதும் இருந்து கலந்து கொண்டனர். கொடைக்கானல் செயின்ட் பீட்டர்ஸ் பள்ளியும், இந்தியன் செஸ் பள்ளியும், மௌன்ட் செஸ் அகாடமியும் இணைந்து இந்த போட்டியினை நடத்தினர். மூன்று தினங்கள் இந்த போட்டிகள் நடந்தது. போட்டியினை முன்னாள் டி.ஜி.பி. கனபதி, கொடைக்கானல் வனச்சரக மாவட்ட வன அலுவலர் டாக்டர் முருகன், ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்த போட்டிகளுக்கு கொடைக்கானல் செயின்ட் பீட்டர்ஸ் பள்ளியின் தாளாளர் சாம்பாபு தலைமை தாங்கினார்.
 மூன்று நாட்கள் இந்த போட்டிகள் நடத்தப்பட்டது. ஒவ்வொரு நாளும் இரண்டு
சுற்றுகள் போட்டி நடத்தப்பட்டது. மிகவும் விறு விறுப்பாக நடந்த இந்த போட்டிகளில் பல சிறந்த செஸ் வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.
 அகில இந்திய அளிவிலான இந்த செஸ் போட்டியில் 8 வது மற்றும் இறுதிச் சுற்றில் டைபிரேக்கர் முறையில் 7 புள்ளிகள் பெற்று சென்னை ஐ.சி.எப். ஐ சேர்ந்த சையதுஅன்வர்சாலி சேம்பியன் பட்டம் பெற்றார். இவருக்கு பரிசு கோப்iயுடன் 35 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. இதே 7 புள்ளிகள் பெற்ற கொடைக்கானலை சேர்ந்த லட்சுமிநாராயணன்,இரண்டாம் இடத்தையும் சென்னை பி.எஸ்.என்.எல். ஐ சேர்ந்த ராம்கிரு~;ணன் மூன்றாம் இடத்தையும் பெற்றனர். 6.5 புள்ளிகள் பெற்று லோஸே;, கனிஸ்க், பாலசுப்பிரமணியம், அனுப் சங்கர், சரண்யா, கௌதம், விக்னே~; ஆகியோர் அடுத்த 10 இடங்களை பெற்றனர். இவர்களுக்கும் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. மொத்தம் 3 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கப் பரிசுகளுடன் 132 பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு கொடைக்கானல் செயின்ட் பீட்டர்ஸ் பள்ளியின் இயக்குநர் ரோகன் சாம்பாபு தலைமை தாங்கினார். தமிழ்நாடு மீன்வளத்துறை கூடுதல் இயக்குநர் சமீரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் ரொக்க பரிசுகளையும் வழங்கினார். இந்த விழாவில் மௌன்ட் செஸ் அகாடமியின் ரவிச்சந்திரன், இந்தியன் செஸ் பள்ளியின் ஜான் ஜெயராஜ், ஜேம்ஸ் ஜெயராஜ், திண்டுக்கல் மாவட்ட செஸ் கழக செயலாளர் ஆக்சியம்அப்துல் நாசர், சன்பில்டர் ரவீந்திரன், செயின்ட் பீட்டர்ஸ் பள்ளியின் துணை இயக்குநர் சான்ட்ரா ரோகன், நடுவர் விஜயகுமார், மகேந்திர பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பட விளக்கம்: கொடைக்கானல் செயின்ட் பீட்டாஸ் பள்ளியில் நடந்த அகில இந்திய அளவிலான செஸ் போட்டியில் சேம்பியன் பட்டம் பெற்ற சையது அன்வர்சாலிக்கு பரிசு கோப்பையையும் ரொக்க பரிசையும் மீன்வளத்துறை கூடுதல் இயக்குநர் சமீரன் வழங்கினார். அருகில் செயின்ட் பீட்டர்ஸ் பள்ளியின் இயக்குநர் ரோகன் சாம்பாபு

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago