முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பேருந்துகளில் தமிழக அரசு வருமான உச்சவரமின்றி பயணச் சலுகை வழங்கி வருகிறது: அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ பெருமிதம்

செவ்வாய்க்கிழமை, 23 மே 2017      தூத்துக்குடி
Image Unavailable

 

மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவி குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தலா ரூ.58,690/= மதிப்பில் 35 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.20,54,150/= லட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கர பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், தலா ரூ.20,000/=ம் மதிப்பில் 30 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6,00,000/= லட்சம் மதிப்பிலான சிறப்பு சக்கர நாற்காலிகளையையும், மகளிர் திட்டத்தின் மூலம் தேசிய நகர்புற வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் 28 சுய உதவிக்குழுக்களுக்கு தலா ரூ.10,000/= வீதம் ரூ.2.80 லட்சம் மதிப்பில் சுழல் நிதிக்கான காசோலைகளையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் ஊராட்சி அளவிலான 2 கூட்டமைப்புகளுக்கு தலா ரூ.1,00,000/= வீதம் ரூ.2,00,000/= மதிப்பில் ஊக்க நிதிக்கான காசோலைகள், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் தலா ரூ.4800/=வீதம் 3 பயனாளிகளுக்கு ரூ.14,400/= மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரங்கள் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் 1 பயனாளிக்கு ரூ.4800/= மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரம் என ஆக மொத்தம் 99 பயனாளிகளுக்கு ரூ.31,53,350/= லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி தெரிவித்ததாவது

தனி அக்கறை

 

மறைந்த முதலமைச்சர் அம்மா மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றத்தில் தனி அக்கறை கொண்டு அளப்பரிய நலத்திட்டங்களை தாயுள்ளத்தோடும், மனித நேயத்தோடும், அள்ளித்தந்து சிறப்புடன் செயல்படுத்தினார்கள்.மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் வளம் பெருக்க, நலம் செழிக்க மறைந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள் 1993-ல் தொடங்கிய பயணம் இன்றுவரை தங்குதடையின்றி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. இதற்குத் தக்க சான்று, மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கு சிறப்பாக சேவை புரிந்தமைக்காக இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலம் நம்முடைய தமிழ்நாடு என்கிற தேசிய விருதினை 2013 ஆம் ஆண்டு, நம்முடைய மறைந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு பெற்றிருக்கிறது என்பதே ஆகும். மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறைக் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படத்தும் விதமாக அவர்களுக்கென்று நலத்திட்டங்கள் பெற்றிடும் வகையில் வருமான உச்சவரம்பு முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஆரம்பகால பயிற்சி மையங்களை நிறுவுவதில் தமிழ்நாடு அரசு ஒரு முன்னேடி மாநிலமாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களிலும் செவித்திறன் பாதிப்பிற்குட்பட்ட குழந்தைகளுக்கும், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காகவும் 15 மாவட்டங்களில் பார்வையற்ற குழந்தைகளுக்கான ஆரம்ப பயிற்சி மையங்கள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. மேலும் கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், மனவளர்ச்சி குன்றியோருக்கும் பராமரிப்பு உதவித்தொகையாக மாதம் ரூ.1000ஃ- வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை மறைந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களின் ஆணையின்படி ரூ.1500/= வழங்கப்பட்டு வருகின்றது. மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து வழங்கி வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச் சான்றிதழுடன் கூடிய அடையாள அட்டை வழங்கி இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. மாநில போக்குவரத்துக் கழக பேருந்துகளில் வருமான உச்சவரமின்றி பயணச் சலுகை வழங்கி வருகிறது.

மாற்றுத்திறனாளின் திருமணத்தை ஊக்கப்படுத்தி அவர்களுடைய சமுதாய அந்தஸ்தை உயர்த்தும் வகையில் திருமாங்கல்யத்திற்காக தங்க நாணயத்துடன் திருமண நிதி உதவித் திட்டம், வேலைவாய்ப்பற்ற மாற்றுதிறனாளிகளுக்கு நிவாரண நிதியாக ரூ.600 முதல் ரூ1000 வரை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டதிற்கு ரூ22.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வேலைவாய்ப்பில் 3 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் சுயவேலைவாய்ப்பினை தொடங்கிட வங்கிகள் மூலம் கடன் உதவி மற்றும் கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்கள், பணிபுரிபவர்கள், சுய தொழில் புரிவோர்களுக்கு இணைப்பு சக்கர பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சிறப்பு சக்கர நாற்காலி என பல்வேறு திட்டங்களை மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் ஒளியேற்றும் விதமாக தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இவற்றை எல்லாம் பெற்று வாழ்வில் வளமுடன் வாழ வாழ்த்துகிறேன் என்றார்;;.

இவ்விழாவில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சுந்தர்ராஜ், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் பி.டி.ஆர்.ராஜகோபால், சார் ஆட்சியர் (பொ) பா.சேகர், மகளிர் திட்ட அலுவலர் திருமதி.ரேவதி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ்.சரவணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் டி.நவாஸ்கான் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்