காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் உலகப் புத்தக நாள் விழா

karigudi

காரைக்குடி:-காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் “உலகப் புத்தகநாள் விழா” பல்கலைக்கழக மைய நூலககருத்தரங்க அறையில் நடைபெற்றது.
  அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா. சொ. சுப்பையா அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்று உரையாற்றுகையில், வள்ளல் அழகப்பர் அவர்களின் கனவை நனவாக்கும் வகையில், மேலைநாடுகளிலுள்ள நூலகத்திற்கு இணையாக அழகப்பா பல்கலைக்கழக மைய நூலகம் சுகுஐனு வசதியுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது என்றார். எந்த ஒரு உயிரினமும் தனது அறிவை, அனுபவத்தை சேகரித்து மற்றொரு உயிரினத்திற்க்கு தருவதில்லை. ஆனால், மனித சமுதாயம் மட்டும் தான் தனது அறிவை, அனுபவத்தை சேகரித்து அடுத்ததலை முறையினர் பயன்பெறும் வகையில் தருகிறது. நூலகத்திற்குச் சென்று நிறைய நூல்களை படித்தவர்கள் மட்டுமே வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைந்துள்ளார்கள். சாதனையாளர்கள் ஒவ்வொருவரும் நல்லபுத்தகங்களை படித்ததால் மட்டுமே செயற்கரிய செயல்களைச் செய்து உலகப் புகழ் பெற்றார்கள். இதற்கு சிறந்த உதாரணம், மகாத்மாகாந்தி, நேரு, அம்பேத்கார்,மார்க்ஸ்,லெனின்,மண்டேலா,சார்லிசாப்ளின்,அண்ணா,ஆப்ரகாம்லிங்கன் போன்ற தலைவர்கள் ஆவார்கள். ஆதலால், ஆசிரியர்கள் மாணவர்களிடையே புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்;. இது வீட்டுக்கும் நாட்டுக்கும் நன்மைபயக்கும் என்றார்.
 பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் பேரா. அ. நாராயண மூர்த்தி வாழ்த்துரை வழங்கினார். அவர் தமது உரையில், அறிவையும், ஞானத்தையும் தரக்கூடிய புத்தகங்களுக்கு இணைவேறு எதுவும் இல்லை என்றார். புத்தகம் இல்லாமல் எதுவும் இல்லை.  நமக்கு என்னென்ன தேவைப்படுகிறதோ, அத்தனையும் புத்தகங்களை படிப்பதால் நமக்கு கிடைக்கிறது. புத்தகம் ஒருகளஞ்சியம். நாம் என்னவாக ஆக வேண்டுமானாலும், புத்தகத்தை அவசியம் படிக்கவேண்டும்.  புத்தகம் படிப்பதால் ஒவ்வொருவரும் விழிப்புணர்வு அடைகின்றனர். மாணவர்கள் அனைவரும் தரமான புத்தகங்களை படிக்கவேண்டும். இதன் மூலம், அவர்கள் சிறந்த ஆராய்;ச்சியினை மேற்கொள்ள அது ஒருதாக்கத்தை ஏற்படுத்தும். 
 திருச்சி ஜமால் முகமது கல்லூரி மேனாள் துணை முதல்வர் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக மேனாள் ஆட்சிக்குழு உறுப்பினரு மானபேரா.பீ.மு. மன்சூர் இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார். அவர் தமது உரையில், உலகப் புத்தகநாள் ஏற்படுத்தப்பட்ட வரலாறு மற்றும் அதன் பயன்களை விளக்கினார். “படி, நூலைப் படி, சங்கத் தமிழ் நூலைப் படி, முறையாகப் படி”  என்று பாவேந்தர் பாரதிதாசன் கூறியதை குறிப்பிட்டு, மாணவர்கள் தினமும் நூலகத்திற்குச் சென்று முறையாகப் படிக்க கேட்டுக் கொண்டார். ஒரு ஆசிரியர் குறைந்தது பத்துமாணவர்களையாவது நூலகத்திற்குச் செல்லும் நல்லபழக்கத்தை உருவாக்க பாடுபடவேண்டு மென்று கேட்டுக் கொண்டார். இந்தியாவில் வரலாற்று நூல்களில் உண்மைத் தன்மை குறைவாக இருப்பதைச் சுட்டிக்காட்டி, வரலாற்று நூல்கள் உண்மைகளை மட்டுமே சமுதாயத்திற்குத் தரவேண்டும் என்று வலியுறுத்தினார்.
 பல்கலைக்கழக நூலகர் முனைவர் அ.திருநாவுக்கரசு வரவேற்புரையாற்றினார். நூலகர் முனைவர் சி.பாஸ்கரன் நன்றிகூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ