முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடிப்படை கல்விதான் ஜனநாயகத்தையும் வாழ்க்கை தரத்தையும் பலப்படுத்தி உயர்ந்த நிலைக்கு எடுத்து செல்லும் : கல்வி காவலர் போஸ் பேச்சு

செவ்வாய்க்கிழமை, 23 மே 2017      காஞ்சிபுரம்
Image Unavailable

காஞ்சிபுரம் மாவட்டம் கூரம் பகுதியில் உள்ள ஜெய்மாதாஜீ பொறியியல் வளாகத்தில் நடைபெற்ற ஜெய்மாதாஜீ சிபிஎஸ்சி பள்ளியின் பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல்வர் மகாலிங்கம் தலைமை தாங்கினார்.

21 கல்லுாரிகள்

விழாவில் கல்வி காவலர் போஸ் கலந்து கொண்டு பேசுகையில் , அடிப்படை கல்விதான் ஜனநாயகத்தையும் வாழ்க்கை தரத்தையும் பலப்படுத்தி உயர்ந்த நிலைக்கு எடுத்து செல்லும் எனவும் , இனி வருங்காலத்தில் கல்வி சமத்துவம் மிகவும் கட்டாயம் தேவை, கல்வியின் அவசியம் உணர்ந்து தான் மறைந்த முதல்வர் புரட்சி தலைவர் எம்ஜிஆர் எங்களுக்கு கல்வி கற்பித்தல் அவசியத்தை வலியுறுத்தினார்.

அதன்படி 21 கல்லூரிகள் துவங்கி அனைவருக்கும் கல்வி வழங்கி வருவதாகவும் கடைசி வரை கல்வியின் வளர்ச்சிக்காக பாடுபாடுவேன் என்றார். மேலும் நிகழ்ச்சியில் செய்யாறு எம்.எல். மோகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் குழந்தைகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்