முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட்டுறவு ஒன்றியம் மூலம் உறுப்பினர் கல்வித்திட்ட முகாம்

செவ்வாய்க்கிழமை, 23 மே 2017      ஈரோடு
Image Unavailable

24திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்திற்குட்பட்ட ஈடி. 1936 பாலகுமார் நகர் அனைத்து மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மூலம் உறுப்பினர் கல்வித்திட்ட முகாம்  சங்க வளாகத்தில் நடத்தப்பட்டது.

வெண்மை புரட்சி

இம்முகாமிற்கு ஈடி. 1936 பாலகுமார்நகர் அனைத்து மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர்  ர. ரத்தினம்  தலைமை வகித்தார்.  ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் .வி. தெய்வநாயகம்  சிறப்புரையாற்றினார்கள்.  அவர்தம் உரையில் வெண்மை புரட்சியில் தமிழகம் முன்னோடி மாவட்டமாக திகழ்கிறது.  இச்சங்கம் 2012 ல் மகளிருக்காக துவக்கப்பட்ட சங்கம்.  இச்சங்கம் பாலகுமார்நகர், நெஞ்சிக்காளிபாளையம், செல்வபுரம், கோம்பகாட்டுப்புதூர், வாய்காட்டுத்தோட்டம் ஆகிய கிராமங்களை செயல்எல்லையாகக் கொண்டு 110 உறுப்பினர்களுடன் இலாபத்தோடு செயல்பட்டுவருகிறது. 

380 லிட்டர் பால் கொள்முதல்

தற்பொழுது சங்கம் நாளொன்றுக்கு சராசரியாக 380 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு ஈரோடு ஆவின் நிறுவனத்திற்கு அனுப்பி வருகிறது.  இச்சங்கத்தில் உறுப்பினர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பால் மில்கோ டெஸ்டர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டடு தரமான பால் பெற்று வழங்கி வருகிறது.  வாரந்தோறும் திங்கட்கிழமை ஈரோடு ஆவின் கால்நடை மருத்துவக் குழுவினரால் கால்நடைகளுக்கு மருத்துவவசதி செய்யப்பட்டு அதன் மூலம் உறுப்பினர்கள் பயனடைந்து வருவது மிகவும் பாராட்டிற்குரியது.  தொடர்ந்து இலாபத்தில் செயல்பட்டுவரும் இச்சங்கம் ஆண்டுதோறும் உறுப்பினர்களுக்கு போனஸ் வழங்கி வருகிறது என்றும் மேலும் இச்சங்கம் சொந்த கட்டிடத்தில் செயல்பட உறுப்பினர்கள் முயற்சி எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இம்முகாமில் ஈரோடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய விரிவாக்க அலுவலர் .எஸ்.டி. அப்துல்லத்தீப் , ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றிய கூட்டுறவு பிரச்சார அலுவலர் .கோ. வெங்கடராமன்  ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.  இம்முகாமில் 2016-2017 ஆம் ஆண்டில் சங்கத்திற்கு அதிகம் பால் உற்றிய உறுப்பினர்  ஆர். இரத்தினம்  மற்றும் சிறந்த கன்றுகள் வளர்ப்பில்  எஸ். பூங்கொடி  ஆகியோரை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னதாக சங்க செயலாளர்  எஸ். தனலட்சுமி  வரவேற்றார்.   ஆர். அஞ்சலம்  நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்