முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவாரூர் மாவட்டத்தில் கூத்தாநல்லூர் புதிய வட்டாட்சியர் அலுவலகத்தை முதல்வர் திறந்து வைத்தார் : கலெக்டர் நிர்மல் ராஜ் குத்துவிளக்கேற்றினார்

செவ்வாய்க்கிழமை, 23 மே 2017      திருவாரூர்
Image Unavailable

தமிழக முதலமைச்சர் திருவாரூர் மாவட்டத்தில் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள கூத்தாநல்லூர் புதிய வட்டாட்சியர் அலுவலகத்தை காணொலிகாட்சி மூலம் திறந்து வைத்ததை தொடர்ந்து கூத்தாநல்லூரில் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ் குத்துவிளக்கேற்றி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

புதிய அலுவலகம்

பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது, மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் அவர்களால் 16.9.2016 அன்று திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் வட்டத்தைப் பிரித்து புதிதாக கூத்தாநல்லூர் வட்டம் உருவாக்குவது தொடர்பாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அரசாணை (நிலை) எண்.171 வருவாய் (.நி.1 (1)) துறை நாள் 9.5.2017 –ன்படி கூத்தாநல்லூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம் உருவாக்கி ஆணையிடப்பட்டுள்ளது. இந்த புதிய வட்டம் தமிழக முதலமைச்சர் அவர்களர்  துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் , குடவாசல் , மன்னார்குடி , நீடாமங்கலம் ஆகிய வட்டங்களை சீரமைத்து கூத்தாநல்லூரை தலைமையிடமாகக் கொண்ட புதிய வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. கூத்தாநல்லூர் புதிய வட்டாட்சியர் அலுவலகம் கூத்தாநல்லூர் , சையது உசேன் சாலையில் நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள கட்டிடத்தில் செயல்படுகிறது. மேற்கண்ட அரசாணையின்படி வட்டச் சீரமைப்புக்கு பின் திருவாரூர், குடவாசல், மன்னார்குடி, நீடாமங்கலம், கூத்தாநல்லூர் ஆகிய வட்டங்களில் உள்ள கிராமங்களை சீரமைத்து கூத்தாநல்லூர் வட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மன்னார்குடி வட்டத்தில் உள்ள 75 வருவாய் கிராமங்களை சீரமைத்து 66 வருவாய் கிராமங்களும்,நீடாமங்கலத்தில் 61 வருவாய் கிராமங்களை சீரமைத்து 38 வருவாய் கிராமங்களும்,குடவாசல் வட்டத்தில் 105 வருவாய் கிராமங்களை சீரமைத்து 62 வருவாய் கிராமங்களும், திருவாரூர் வட்டத்தில் உள்ள 42 வருவாய் கிராமங்களை சீரமைத்து 62 கிராமங்களும் , புதிதாக தோற்றுவிக்கப்பட்ட கூத்தாநல்லூர் வட்டத்தில் 55 வருவாய் கிராமங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருவாரூர் வட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான திருக்கண்ணமங்கை சரகத்தை சேர்ந்த 20 கிராமங்கள் குடவாசல் வட்டத்தில் இருந்து தற்பொழுது திருவாரூர் வட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. கூத்தாநல்லூர் வட்டத்திற்கு வட்டாட்சியர் பணியிடம் உட்பட 40 பணியிடங்கள் புதியதாக தோற்றுவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து 60 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை , புதிய மின்னணு குடும்ப அட்டை உள்ளிட்ட ரூ.3 லட்சத்து 45 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் க.சக்திமணி,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தியாகராஜன், வேளாண் இணை இயக்குநர் மயில்வாகணன், வருவாய் கோட்டாட்சியர் முத்துமீனாட்சி, செல்வசுரபி. மாவட்ட வழங்கல் அலுவலர் ஆரோக்கிராஜ் , வட்டாட்சியர் பரஞ்ஜோதி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago