முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக அரசின் சார்பில் முத்தரையர் மன்னர் பேரரசர் பெரும்பிடுகு பிறந்தநாள் விழா அமைச்சர்கள் வெல்லமண்டி என்.நடராஜன் எஸ்.வளர்மதி மாலை அணிவித்தனர்

செவ்வாய்க்கிழமை, 23 மே 2017      திருச்சி
Image Unavailable

திருச்சிராப்பள்ளியில் நேற்று(23.05.2017) முத்தரையர் மன்னர் பேரரசர் பெரும்பிடுகு 1342-வது பிறந்தநாள் விழாவினையொட்டி சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் , பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி , மாவட்ட கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் டி.ரத்தினவேல் ஆகியோர் நேற்று(23.05.2017) அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

சிலைக்கு மாலை

நாட்டின் விடுதலைக்காகவும், சமுதாய மேம்பாட்டுக்காகவும் பாடுபட்ட தலைவர்களின் நினைவினை போற்றிடும் வகையில் அவர்களது திருவுருவச்சிலைக்கு தமிழக அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், திருச்சிராப்பள்ளியில் முத்தரையர் மன்னர் பேரரசர் பெரும்பிடுகு பிறந்தநாள் விழா அரசு சார்பில் ஆண்டுதோறும் மே-23 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று நடைபெற்ற அரசு விழாவில் திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் சாலையிலுள்ள முத்தரையர் மன்னர் பேரரசர் பெரும்பிடுகு அவர்களின் திருவுருவச் சிலைக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் , பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.

அதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் டி.ரத்தினவேல், திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார், தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க நிறுவனத் தலைவர் ஆர்.விஸ்வநாதன், வீர முத்தரையர் முன்னேற்ற சங்க நிறுவனத் தலைவர் கே.செல்வக்குமார், தமிழ்நாடு முத்தரையர் சங்க மாநில பொது செயலாளர் மரு.பாஸ்கரன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் பத்மநாதன், அமராவதி கூட்டுறவு சங்கத்தலைவர் ஜெயபால், முன்னாள் அமைச்சர்கள் கு..கிரு~;ணன், மு.பரஞ்ஜோதி, கே.கே.பாலசுப்பிரமணியன், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன், முன்னாள் ஒன்றியக்குழுத்தலைவர் முத்துக்கருப்பன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் மலைக்கோட்டை ஐயப்பன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் கண்ணதாசன், முத்தரையர் சங்க பிரதிநிதிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் அருண்.மாநகர காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) பிரபாகரன்,வட்டாட்சியர் பாத்திமாசகாயராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்