முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தரங்கம்பாடியில் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் தொடர்பான பயிலரங்கம் கலெக்டர் சு.பழனிசாமி துவக்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 23 மே 2017      நாகப்பட்டினம்
Image Unavailable

 

நாகப்பட்டினம் மாவட்டம், செம்பனார்கோவில் ஒன்றியம், தரங்கம்பாடியிலுள்ள டேனிஷ் கோட்டை ஆளுநர் மாளிகையில் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் தொடர்பான பயிலரங்கத்தினை மாவட்ட கலெக்டர் சு.பழனிசாமி,நேற்று(23.05.2017) துவக்கி வைத்தார்.

பயிலரங்கம்

தொல்லியல் தொடர்பான பயிலரங்கத்தினை துவக்கி வைத்து கலெக்டர் தெரிவித்ததாவது,இன்றைய தினம் நடைபெறும் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் தொடர்பான பயிலரங்கம் 45-வது பயிலரங்கம் ஆகும். தமிழகத்தில் 1961-ல் தொல்லியல் துறை உருவாக்கப்பட்டது. கல்வெட்டுகள் மூலம கிடைக்கப் பெறும் சான்றுகளை வருங்கால சந்ததியினருக்கு கொண்டு செல்லும் அரும்பணியினை தொல்லியல் துறை ஆற்றி வருகிறது. 1974-75 இல் கல்வெட்டு பயிற்சி நிறுவனம் தொடங்கப்பட்டு, நடைபெற்று வருகிறது. நமது நாட்டில் தொன்மைக் காலங்களில் நிலவிய நாகரீங்களை தெரிந்து கொள்ள கல்வெட்டுகள் உதவுகின்றன. இந்தியாவில் பின்பற்றப்படுவது, சிந்து சமவெளி நாகரீகம் ஆகும். மேலும் ஹரப்பா, மொஞ்சதாரோ, எகிப்து நாகரீகங்கனைப் பற்றி கல்வெட்டுக்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

சிந்து சமவெளி நாகரீகமானது, 1921-ல் ரயில்வே பணிகக்காக சிந்து சமவெளியில் தோண்டப்பட்டபோது, கிடைக்கப்பட்ட ஆவணங்களின் மூலம் தெரிய வருகிறது. ஆதி மனிதன் பயன்படுத்திய ஆயுதங்களைக் கொண்டு, அவனது நாகரீகம் கணிக்கப்படுகிறது. ஆதி மனிதன் கல்லை ஆயுதமாகப் பயன்படுத்திய காலம் பழைய கற்காலம், புதிய கற்காலம் எனவும், செம்பு போன்ற உலோகங்களை பயன்படுத்திய காலம் செப்பு காலம் எனவும், இரும்பை பயன்படுத்திய காலம் இரும்புக் காலம் எனவும், தற்போது அணுi ஆயுதமாகப் பயன்படுத்தி வரும் காலம் அணுக் காலம் எனவும் கூறப்படுகிறது. கல்வெட்டுக்கள் ‘வட்டு’ எழுத்துக்கள் கொண்டு உருவாக்கப்படுகின்றது. கல்வெட்டு ஆராய்ச்சி நிறுவனம், கல்வெட்டுக்களை ‘தமிழ்பிரமி’ கல்வெட்டுகள் என குறிக்கின்றன." என தெரிவித்தார்.

துணை இயக்குநர்(தொல்லியல் துறை) இரா.சிவானந்தம், கல்வெட்டாளர்(தொல்லியல் துறை) பாஸ்கர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்