முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இலங்கை வீரர் சங்ககாரா ஓய்வு

செவ்வாய்க்கிழமை, 23 மே 2017      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் : இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் குமார் சங்ககாரா முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

12,400 ரன்கள்

15 ஆண்டுகளாக உலகின் தலை சிறந்த கிரிக்கெட் வீரராக விளங்கிய இலங்கை அணியின் குமார் சங்ககாரா சர்வதேச கிரிக்கெட் விளையாட்டில் இருந்து கடந்த 2015-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். 134 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சங்ககாரா, 12400 ரன்களை எடுத்துள்ளார். சங்ககாரா தலைமையிலான ஒரு நாள் போட்டிக்கான இலங்கை அணி 2007, 2011-ம் ஆண்டுகளில் இறுதி போட்டி வரை சென்றது. ஓய்வை அடுத்து சங்ககாரா உள்ளூர் முதல்தர போட்டிகளில் விளையாடி வந்தார்.

ஓய்வு அறிவிப்பு

இந்நிலையில், செப்டம்பர் மாதம் இங்கிலாந்தில் நடைபெற உள்ள தொடர் உடன் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சங்ககாரா அறிவித்துள்ளார். இது குறித்து சங்ககாரா கூறுகையில், “கிரிக்கெட் வீரர்கள் அல்லது மற்ற விளையாட்டு வீரர்கள் எல்லோருக்கு ஓய்வு நேரம் என்பது கண்டிப்பாக உண்டு. அவர்கள் நிச்சியம் வெளியேறியே ஆக வேண்டும். நான் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலிய இருந்து வந்துள்ளேன். நான் முழு அளவில் விளையாடியுள்ளேன். ஆனால், விளையாட்டு வெளியேயும் வாழ்வதற்கு வாழ்க்கை உள்ளது” என்றார். அக்டோபர் மாதத்துடன் சங்ககாராவுக்கு 40 வயது நிறைவடைய உள்ள நிலையில், அவர் இந்த முடிவினை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago