முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மான்செஸ்டர் குண்டுவெடிப்பு எதிரொலி: சாம்பியன்ஸ் டிராபி போட்டி பாதுகாப்பு குறித்து ஆலோசிக்க பி.சி.சி.ஐ அழைப்பு

செவ்வாய்க்கிழமை, 23 மே 2017      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்க பிசிசிஐ அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

குண்டு வெடிப்பு

இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரத்தில் நேற்று முன்தினம் இசைக்கச்சேரி நடைபெற்ற மைதானத்தில் வெடி குண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்த தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.  இன்னும் சில தினங்களில் இங்கிலாந்தில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி  கிரிக்கெட் போட்டிகள் துவங்க உள்ள நிலையில், இந்த குண்டு வெடிப்பு வீரர்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.

பயணம் குறித்து ஆய்வு

இதையடுத்து வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்திய கிரிக்கெட் வாரியம் அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. மும்பையில் உள்ள பிசிசிஐயின் தலைமை அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் ஒட்டுமொத்த சுற்றுப்பயண திட்டமும் முழுமையாக இந்த கூட்டத்தின் போது ஆய்வு செய்யப்படும் என்று தெரிகிறது.

இந்திய அணி பயணம்

மான்செஸ்டர் தாக்குதல் குறித்து ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிட்டுள்ள சர்வதேச கிரிக்கெட் வாரியம்,  அதிமுக்கியத்துவம் வழங்கி பாதுகாப்பு பணிகள் செய்யப்படும் என தெரிவித்துள்ளது.  ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் கலந்து கொள்வதற்காக இந்திய கிரிக்கெட் அணி வரும் புதன்கிழமை இங்கிலாந்து புறப்பட உள்ளது. ஜூன் 1-ம் தேதி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிகள் துவங்க உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்