முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணுவ வாகனத்தில் இளைஞரை கட்டிச்சென்ற அதிகாரியின் நடவடிக்கைக்கு சேவாக் பாராட்டு

செவ்வாய்க்கிழமை, 23 மே 2017      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வாகனத்தில் இளைஞரை கட்டிச்சென்ற அதிகாரியின் நடவடிக்கைக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கல்வீசித் தாக்குதல்

ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில மாதங்களாக பாதுகாப்புப் படையினருக்கும், உள்ளூர் இளைஞர்களுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. ராணுவத்தினர் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கலவரக்காரர்களின் கல்வீச்சிலிருந்து தப்பிப்பதற்காக காஷ்மீர் இளைஞர்களை மனிதக் கேடயமாக ராணுவ வீரர்கள் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இந்த கூற்றை மெய்பிக்கும் வகையில் அண்மையில் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வெளியானது. அதில்,  ராணுவ ஜீப்பின் முன்பகுதியில் இளைஞர் ஒருவரை கட்டிவைத்து அழைத்துச் செல்வது போன்ற காட்சி இடம் பெற்று இருந்தது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விசாரணைக்கு உத்தரவு

இந்தச் செயலில் மேஜர் லீதுல் கோகோய் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து ராணுவ நீதிமன்ற விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. அதுதொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மேஜர் லீதுல் கோகோய்க்கு ராணுவத்தில்  சிறப்பான வகையில் பணியாற்றியவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு விருது வழங்கப்பட்டது.

சேவாக் பாராட்டு

இந்த நிலையில், ராணுவ மேஜர் லீதுல் கோகாய் செயலுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக் பாராட்டு தெரிவித்து உள்ளார். தனது ட்விட்டரில் இந்த கருத்தை பதிவு செய்துள்ள சேவாக் அதில் கூறியிருப்பதாவது:-

மெச்சத்தக்க வகையில் பணி புரிந்ததற்காக விருது பெற்றுள்ள மேஜர் நிதின் கோகாய்க்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நமது வீரர்களையும் அங்கு பணி புரிந்தவர்களையும் பத்திரமாக மீட்டு கொண்டு வர சிறந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது”என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago