ரவிஸ்வரர் திருக்கோயில் திருக்குளத்தை சீரமைக்க ரூ.2.50 லட்சம் நிதி ஒதுக்கீடு: அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பேட்டி

புதன்கிழமை, 24 மே 2017      ஆன்மிகம்
Raviswarar  Temple 207 05 24

சென்னை, வியாசர்பாடி அருள்மிகு இரவீஸ்வரர் திருக்கோயிலின் திருக்குளம் ரூ.2.50 லட்சம் மதிப்பில் சீரமைக்கஇந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர். எஸ். இராமச்சந்திரன் உத்தரவு.

குடிமராமத்து பணி

சென்னை, வியாசர்பாடி, அருள்மிகு இரவீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான திருக்குளம்சீரமைக்கும் பணிகள் குறித்து இன்று (24.05.2017) மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறைஅமைச்சர் சேவூர். எஸ். இராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.திருக்குளம் சீரமைப்பு பணிகள் குறித்து அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி மாநிலம் முழுவதும் உள்ள நீர் நிலைகளைதூர்வாரி சீரமைத்து, குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டு, அதற்கான பணிகளைமுதலமைச்சர் .எடப்பாடி கே.பழனிசாமியால் துவக்கிவைக்கப்பட்டது. இப்பணிகள் தமிழகம் முழுவதும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. அன்மையில

திருக்குளங்கள் தூர் வாரல்

நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை ஆய்வுக்கூட்டத்தில் திருக்கோயில்களுக்கான மேம்பாட்டுப்பணிகளை சிறப்பாக மேற்கொள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறுஆலோசனைகள் வழங்கியுள்ளார். அதன்படி திருக்கோயில் நிதியிலிருந்து திருக்கோயில்களுக்குசொந்தமான திருக்குளங்களை தூர்வாரி சீரமைக்கும் பணிகள் இந்து சமய அறநிலையத்துறையின்மூலம் தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில், சென்னை மண்டலத்தில்உள்ளதிருக்கோயில்களுக்கு சொந்தமான திருக்குளங்களில் தூர்வாறும் திருப்பணிகள் சிறப்பாக நடைபெற்றுவருகின்றன.

வியாசர்பாடி திருக்குளம்

சென்னை, வியாசர்பாடி, அருள்மிகு இரவீஸ்வரர் திருக்கோயிலின்திருக்குளம் ரூ.2.50 லட்சம் மதிப்பில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும், பெரம்பூர் சட்டமன்றஉறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதி மற்றும் நன்கொடையாளர்கள் நிதி மூலம் கூடுதல் வசதிகள்செய்வது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்குஅறிவுறுத்தப்பட்டுள்ளது. இதே போல் தமிழகத்தில் உள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமானதிருக்கோயில்களில் சீரமைப்பு பணிகள் தேவைப்படும் திருக்குளங்கள் அந்தந்த திருக்கோயில்நிர்வாகம் மூலம் தூர்வாரி சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் ஆய்வின்போதுஇந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர். எஸ். இராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சிகளின் போது, இந்து சமயஅறநிலையத்துறை கூடுதல் ஆணையர்(பொ). அர. சுதர்சன், சென்னை மண்டல இணைஆணையர்(பொ). ம. அன்புமணி, உதவி ஆணையர் பா. விஜயா, திருக்கோயில் செயல் அலுவலர்கோ. ஜெயபிரகாஷ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்: