முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு ஆஸ்பத்திரியில் ரூ.3 லட்சத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ராமநாதபுரம் கலெக்டர் நடராஜன் ஆய்வு

புதன்கிழமை, 24 மே 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில்  மாவட்ட நிர்வாகம், ஓஎன்ஜி.சி நிறுவனம் மற்றும் ரோட்டரி சங்கம்  ஆகியவற்றின் சார்பாக, மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் ஆகியோரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்திட ஏதுவாக ரூ.3.4 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கு மையத்தின்  (ஆர்.ஓ.பிளாண்ட்)  மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வரும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.
 ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை  உள்நோயாளிப்பிரிவு, வெளிநோயாளிப்பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, டயலிசிஸ் சிகிச்சைப் பிரிவு, நியூராலஜி சிகிச்சைப் பிரிவு, மின்னொலி இதய வரைவு சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட அனைத்து சிகிச்சைப் பிரிவுகளுடன் அனைத்து தரப்பு மக்கள் நவீன மருத்துவ வசதிகள் பெற்று பயன்பெறும் வகையில் செயல்பட்டு வருகிறது. மேலும் மருத்துவமனையில் ரூ.5 லட்சம் செலவில் 45 கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அமருவதற்கு ஏதுவாக இருக்கை வசதிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. தவிர உள்நோயாளிகளுக்கும் படுக்கை வசதி அதிகப்படுத்தப்பட்டுள்ளது. வெளி நோயாளிகள் பார்க்கும் நேரமானது காலை 10.30 மணியிலிருந்து பகல் 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விபத்து, சிகிச்சை பிரிவினை முழு திறனில் இயக்குவதற்கு 250 கே.வி. திறனுள்ள ஜெனரேட்டர் ரூ.30 லட்சம் செலவில் நிறுவுவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் ஆகியோரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்திட ஏதுவாக  மாவட்ட நிர்வாகம், ஓஎன்.ஜி.சி. நிறுவனம் மற்றும் ரோட்டரி சங்கம்  ஆகியவற்றின் சார்பாக  ரூ.3.4 லட்சம் மதிப்பில் நிறுவப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கு மையத்தின்  (ஆர்.ஓ.பிளாண்ட்)  மூலம் குடிநீர்; வழங்கப்பட்டு வரும் பணிகளை நேரில் சென்று கலெக்டர் பார்வையிட்டார். தவிர பிணவறையில் 6 இறந்த உடல்களை பாதுகாத்திடும் வகையில் ரூ.8 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள குளிர்சாதன பெட்டியினையும் நேரில் சென்று பார்வையிட்டார்.
 இந்த ஆய்வின் போது ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர்; மரு.என்.கருப்பசாமி உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago