முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பவானிசாகர் அணை நீர் மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்வு

புதன்கிழமை, 24 மே 2017      ஈரோடு

நீர்ப்பிடிப்பு பகுதிகளில், பெய்த கன மழை காரணமாக, பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால், அணையின் நீர்மட்டம், ஒரே நாளில், ஒரு அடி உயர்ந்ததுஈரோடு மாவட்டத்தில், பவானிசாகர் அணை உள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளாக, நீலகிரி மாவட்ட மலைப்பகுதி உள்ளது. அணையில் தேங்கும் தண்ணீரால், இரண்டு லட்சத்து, 7,000 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. கடந்த ஆண்டு, போதிய மழை இல்லாததால், பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர், செப்டம்பர் முதல் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர், கடந்த எட்டு மாதங்களாக குடிநீருக்காக மட்டுமே பவானி ஆற்றில், தண்ணீர் திறக்கப்படுகிறதுநீடிக்கும் வறட்சியால் சராசரியாக, 100 கன அடி நீர் மட்டுமே வந்து கொண்டிருந்தது.

நீர் இருப்பு,2.4 டி.எம்.சி

இந்நிலையில், நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் கடந்த, மூன்று நாட்களாக, இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு கன மழை பெய்ததால், பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு, 1,200 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 2,000 கன அடியாகவும், மதியம், 1,843 கன அடியாகவும் நீர் வரத்து இருந்தது. நீலகிரி மலையில் இருந்து, வனப்பகுதி வழியாக வரும் மாயாற்றில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம், 38.64 அடியாக இருந்த பவானிசாகர் அணை நீர்மட்டம், ஒரு அடி உயர்ந்து, 39.68 அடியானது. குடிநீர் தேவைக்காக, பவானி ஆற்றில், 150 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலில், 5 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு,2.4 டி.எம்.சி.யாக உள்ளது. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago