முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் மாவட்டம், முதலிபாளையம் , மாணிக்காபுரம்புதூர் குளம் தூர் வாரும் பணி மாவட்ட கலெக்டர் ச. ஜெயந்தி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்

வியாழக்கிழமை, 25 மே 2017      திருப்பூர்
Image Unavailable

திருப்பூர் மாவட்டம், திருப்பூர் ஊராட்சி ஒன்றியம், முதலிபாளையம் ஊராட்சியில் அமைந்துள்ள மாணிக்காபுரம்புதூர் குளம் தூர்வாரும் பணியினை  மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அனுமதி

திருப்பூர் மாவட்டத்தில், உள்ள பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைப்புறம்போக்கு ஏரி, குளம் மற்றும் நீர்தேக்கங்களிலிருந்து விவசாயம், வீட்டுபொது உபயோகம் மற்றும் மண்பாண்டம் செய்தல் ஆகிய உபயோகங்களுக்காக வண்டல், சவுடு மண் மற்றும் கிராவல் ஆகியவற்றை எடுத்து பயன்படுத்திக்கொள்ள அரசாணை.50, தொழில் (எம்.எம்.சி1) துறை நாள் 27.04.2017-ன்படி தமிழக அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.   அதன்படி, மாவட்டத்திலுள்ள பொதுப்பணித்துறை குளத்திலிருந்தும் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள குளத்திலிருந்தும் மேற்படி உபயோகத்திற்காக வண்டல், சவுடு மற்றும் கிராவல் மண் எடுத்துக்கொள்ள அரசிதழ் சிறப்பு வெளியீடு செய்யப்பட்டு மண் எடுத்துக்கொள்ளப்பட்டு குளம் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.  மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது சொந்த வாகனங்களில் குளங்களில் இருந்து மண் எடுத்து  பயன்பெற்று  வருகின்றனர்.

95 ஏக்கர் பரப்பில்

இதனைத் தொடர்ந்து, திருப்பூர் ஊராட்சி ஒன்றியம், முதலிபாளையம் ஊராட்சியில் சுமார் 95  ஏக்கர் பரப்பளவில ஈரோடு கீழ்பவானி வடிநிலக்கோட்ட கட்டுப்பாட்டில் உள்ள   மாணிக்காபுரம் புதூர் பெரியகுளம்  தூர்வாரும் பணியினை மாவட்ட கலெக்டர்  நேரில்  சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வின் போது, பொதுப் பணித்துறை  ஈரோடு கீழ்பவானி  வடிநிலக்கோட்டா செயற்பொறியாளர்  கொளந்தசாமி,  உதவி செயற்பொறியாளர் சுரேஷ்குமார், திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் , விவசாயிகள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்