முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீமை கருவேல மரங்கள் அகற்றிய இடங்களில் மருத்துவ குணம் உள்ள மூலிகை பயிர்களை பயிர் செய்து பயன்பெறுமாறு கலெக்டர் வேண்டுகோள்

வியாழக்கிழமை, 25 மே 2017      விருதுநகர்
Image Unavailable

 விருதுநகர்.-சாத்தூர் வட்டம் சிறுகுளம் கண்மாயில் வேளாண்மை துறையில் மனு செய்த 37 விவசாயிகளுக்கு
வண்டல் மண்  சவுடுமண்  கிராவல் போன்ற கனிமங்களை இலவசமாக மாவட்ட கலெக்டர்சிவஞானம், தலைமையில் விநியோகம் செய்யப்பட்டது.

           விருதுநகர் மாவட்டம்  மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகில் உள்ள விருதுநகர் நகராட்சிக்கு சொந்தமான சீமை கருவேலமரங்கள் அகற்றப்பட்ட நிலத்தில் மருத்துவ குணம் உள்ள மூலிகை பயிர்களை பயிர் செய்து விவசாயிகளுக்கு செயல் விளக்கமும், சாத்தூர் வட்டம், சிறுக்குளம் ஊராட்சிக்குட்பட்ட சிறுக்குளம் கண்மாயில் வேளாண்மை துறையில் மனு செய்த 37 விவசாயிகளுக்கு வண்டல் மண்  சவுடுமண்  கிராவல் போன்ற கனிமங்களை அரசாணையில் நிர்ணயிக்கப்பட்ட அளவு இலவசமாக விநியோகம் செய்யும் பணியையும்  மாவட்ட கலெக்டர்சிவஞானம், தலைமையில் இன்று(24.5.17)  நடைபெற்றது.
 மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
             விவசாயிகள் தங்கள் பட்டா நிலங்களில் மருத்துவ குணம் உள்ள ஆவாரம் பூ, நித்திய கல்யாணி, அவுரி(சென்னா) போன்ற மூலிகை பயிர்களை பயிர் செய்து அதன் மூலம்  கிடைக்கும் விதைகள், இலைகளை அறுவடை செய்து நல்ல வருமானம் பெற முடியும் என்றார்கள்;. இந்த மூலிகை பயிர்கள் வறட்சியை தாங்கி வளர கூடியது. இந்த மூலிகை பயிர்களை ஆடு, மாடுகள் போன்ற கால்நடைகள் உட்கொள்வதில்லை. மேலும், தேசிய மூலிகை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அவுரி(சென்னா) மற்றும் நித்திய கல்யாணி ஆகிய மூலிகை பயிர்களின் விதைகள் மான்யத்தில் வழங்கப்படுகிறது. வேளாண்மைத் துறையின் மூலம் வேம்பு மரக்கன்றுகள் 1 ஹெக்டேருக்கு ரூ.17,000 மான்யத்திலும், புங்கை மரக்கன்றுகள் 1 ஹெக்டேருக்கு ரூ.20,000 மான்யத்திலும் வழங்கப்படுகிறது. ஆகையால் விவசாயிகள் இதனை பெற்று சீமை கருவேல மரங்கள் அகற்றிய இடங்களில் நட்டு வைத்து பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டார்கள்.
             முன்னதாக கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் அசோலா கால்நடை தீவனம் உற்பத்தி செய்வது குறித்த செயல்முறை விளக்கம் மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.அ.சிவஞானம், தலைமையில் விவசாயிகளுக்கு காண்பிக்கப்பட்டது.
             அசோலா பெரணி வகையைச் சார்;ந்த நீலப்பச்சைப் பாசியாகும். அசோலா புரதச் சத்து மிக்க தாதுஉப்புகள் நிறைந்த சிறந்த மலிவு விலை கால்நடைத் தீவனமாகும்.  ஒரு கிலோ புண்ணாக்கு ஒரு கிலோ அசோலாவுக்குச் சமம்.  ஒரு கிலோ அசோலா உற்பத்தி செய்ய 75 பைசா மட்டும் தான் செலவாகும். கால்நடைகளுக்கு அசோலாவை கோதுமை, வைக்கோலுடன் சேர்த்து மாட்டுத் தீவனமாக அளித்ததில் கால்நடைகளின் எடையும், வளர்ச்சியும் அதிகரிப்பதாகவும், பால் உற்பத்தி 15-20 சதவீதம் அதிகரிப்பதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மேலும்  அசோலாவை உட்கொள்ளும் கோழிகள் மற்றும்  வாத்துகள் அதிகமான எடை வருகிறது, முட்டையில் உள்ள மஞ்கள் கரு திடமாக காணப்படும். அசோலாவை உற்பத்தி செய்யும் இடங்களில் கொசுத் தொல்லை இருக்காது. அசோலாவை தயாரித்தல் வருமானம் தரக்கூடிய ஒன்றாகும். எனவே கால்நடை வைத்திருப்போர்கள் அசோலாவை உற்பத்தி செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் கேட்டுக்கொண்டார்.
   அதனைதொடர்ந்து சாத்தூர் வட்டம் சிறுக்குளம் ஊராட்சிக்குட்பட்ட சிறுக்குளம் கண்மாயில் வேளாண்மைத்;துறையில் மனு செய்த 37 விவசாயிகளுக்கு வண்டல் மண்  சவுடுமண்  கிராவல் போன்ற கனிமங்களை அரசாணையில் நிர்ணயிக்கப்பட்ட அளவு இலவசமாக விநியோகம் செய்யும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்து தெரிவித்ததாவது:-                          வண்டல்களிமண் என்பது தண்ணீர் நீரோட்டங்களின் மூலம் ஓடை, குளம், கண்மாய்களில் தேங்கும் மண் ஆகும். பண்டைய காலங்களில் இவ்வாறு சேகரிக்கப்படும் மண் விவசாய நிலங்களுக்கு உரமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் காலப்போக்கில் ரசாயன உரங்களின் பயன்பாட்டினால் நிலங்களுக்கு வண்டல் மண் பயன்படுத்தும் பழக்கம் மறைந்து விட்டது. மேலும் வருடந்தோறும் கண்மாய்களில் கோடை காலங்களில் தூர்வாறுவதால் கண்மாயில் சேகரிக்கப்படும் மழைநீர் நன்றாக உறிஞ்சப்பட்டு, நிலத்தின் நிலத்தடி நீர் ஆதாரம் பெருகுவதற்கு வாய்ப்பு ஏற்படும்.
                      விவசாயிகள் இவ்வாறாக சேகரிக்கப்படும் வண்டல் மண்ணை தங்கள் நிலத்திற்கு பயன்படுத்துவதனால் நிலத்தின் ஈரத்தன்மை காக்கப்பட்டு, நிலத்தின் மண்வளம் மேம்பட்டு, ரசாயன உர பயன்பாட்டினை குறைக்க வழி வகுக்கும். ஆகவே, விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி  நஞ்சை நிலங்களாக இருப்பின் ஏக்கருக்கு 90 கன மீட்டர் வண்டல் மண்ணும், புஞ்சை நிலங்களாக இருப்பின் 75 கன மீட்டர்  வண்டல் மண்ணும் எடுத்துக் கொள்ளலாம். மேலும், வண்டல் மண்  சவுடுமண்  கிராவல் போன்ற கனிமங்களை வீட்டு உபயோகத்திற்கு 30 கன மீட்டரும், மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்களும் 60 கன மீட்டர் என்ற அளவில் மண் எடுத்துக் கொள்ளலாம்;. விவசாயிகள்; மண் எடுப்பதன் மூலம் ஏரிகள், கண்மாய்கள், குளங்கள் போன்ற  நீர்ஆதாரப்பகுதிகளை தூர்வாரி அதனை அதிகப்படுத்தி, கண்மாயிகளை ஆழப்படுத்தி கரைகள் உயர்த்தப்படும். மேலும், வரும் பருவமழைக்காலங்களில் பெய்யும் மழைநீரை சேமிக்க ஏதுவாக அமையும்.
              இதன் மூலமாக விவசாயத்தை பெருக்கி மண்வளம் காத்து பசுமைப்பரட்சியை ஏற்படுத்து முடியும் என்றும், மேலும், விவசாயம்   வீட்டு உபயோகம்  மண்பாண்டம் செய்வதற்கு தேவையான வண்டல் மண்  சவுடுமண்  கிராவல் போன்ற கனிமங்களை அரசாணையில் நிர்ணயிக்கப்பட்ட அளவு இலவசமாக எடுத்து  பயன்படுத்த விரும்பும் நபர்கள் தங்கள் கிராமத்தில் அமைந்துள்ள ஏரி  கண்மாய்  குளம் அல்லது அருகிலுள்ள கிராமத்தில் உள்ள ஏரி  கண்மாய்  குளம்  குறித்த  கிராம கணக்குகளுடனும், மற்றும்; உரிய ஆவணங்களுடனும் கிராம நிர்வாக அலுவலரிடம் சான்றும் பெற்று வருவாய் கோட்;டாட்சியர் அலுவலரிடமோ, வருவாய் வட்டாட்சியர் அலுவலரிடமோ, வட்டார வளர்ச்சி அலுவலரிடமோ, பொதுப்பணித்துறை அலுவலரிடமோ, கனிம வளத்துறை அலுவலரிடமோ, வேளாண்மை விரிவிக்க மைய அலுவலரிடமோ அல்லது  மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பம் செய்து அனுமதி பெற்றுக்கொள்ளலாம்.   
             ஆதனைதொடர்ந்து சாத்தூர் வட்டம் சிறுக்குளம் ஊராட்சிக்குட்பட்ட சிறுக்குளம் கண்மாய் கரை ஓரத்தில் தோட்டக்கலை துறை மூலமாக நீர் பாசன முறையை பயன்படுத்தி பழக்கன்றுகளை மாவட்ட கலெக்டர்சிவஞானம், நட்டு வைத்தார்கள்.      
              இந்நிகழ்ச்சியின்போது, சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.கிருஷ்ணம்மாள், கால்நடைதுறை இணை இயக்குநர்(பொ)டாக்டர்.சிவராமகிருஷ்ணன், வேளாண்மை இணை இயக்குநர் திரு.சு.சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்)திரு.டே.சத்தியராய், சாத்தூர் வட்டாட்சியர் திருமதி.முத்துலட்சுமி உட்பட வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை அரசு அலுவலர்கள்; மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்