முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டியில் பள்ளி பேருந்துகளை கலெக்டர் பொ.சங்கர் ஆய்வு செய்தார்

வியாழக்கிழமை, 25 மே 2017      நீலகிரி
Image Unavailable

ஊட்டியில் பள்ளி பேருந்துகளை மாவட்ட கலெக்டர் பொ.சங்கர் ஆய்வு செய்தார்.

ஆய்வு

தமிழகத்தில் அடுத்த வாரம் பள்ளிகள் தொடங்க உள்ள நிலையில் தனியார் பள்ளிகள் மூலம் இயக்கப்படும் வாகனங்களை ஆய்வு செய்யுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியிருத்தன் பேரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் அந்த வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஊட்டி கலைக்கல்லூரி மைதானத்தில் நேற்று தனியார் பள்ளி பேருந்துகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் கலந்து கொண்டு வாகனங்களில் படிக்கட்டுகள் சரியாக உள்ளனவா. முதலுதவி பெட்டிகள் உள்ளனவா. அதில் மருந்துகள் இருக்கின்றனவா, தீயணைப்பான் கருவி உள்ளதா, அவசர கால வழி உள்ளதா என சோதனை மேற்கொண்டார். சோதனைக்குப்பின் செய்தியாளர்களிடம் கலெக்டர் சங்கர் கூறியதாவது

322 தனியார் பள்ளி வாகனங்கள்

நீலகிரி மாவட்டத்தில் 322 தனியார் பள்ளி வாகனங்கள் உள்ளன. தமிழக அரசின் உத்தரவுப்படி அந்த வாகனங்களை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இம்மாத ஆரம்பத்தில் குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இன்று ஊட்டியில் ஆய்வு நடைபெறுகிறது. இதில் வாகனங்களில் படிக்கட்டுகள், அவசர கால வழி, தீயணைப்பான் கருவி உள்ளிட்டவைகள் முறையாக பராமரிக்கப்படுகின்றன என சோதனை செய்யப்பட்டது.

இதில் சரியாக இல்லாத வாகனங்கள் திருப்பி அனுப்பி சீர் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். ஆய்வின் போது வட்டார போக்குவரத்து அலுவலர் லட்சுமி பதி, மோட்டார் வாகன ஆய்வாளர் சத்தியகுமார், வட்டாட்சியர் மகேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago