முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுவாதி கொலையில் பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்பு : வழக்கறிஞர் ராமராஜ் குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 26 மே 2017      திருநெல்வேலி

ராம்குமார் தற்கொலை வழக்கில் தொடர்புடைய பிரேத,விசாரணை அறிக்கை கடந்த 7 மாத காலமாக கிடைக்கவில்லை இதனால் நீதிதுறை,காவல்துறை, சிறைதுறை மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது என வழக்கறிஞர் இராமராஜ் தெரிவித்துள்ளார்.

 தலைநகரை உலுக்கிய சம்பவம்

கடந்த ஆண்டு ஜூன் 24ம் தேதி காலை சென்னை நுங்கம்பாக்கம்ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தமிழகத்தையே உலுக்கிய இவ்வழக்கில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் ராம்குமார் சிறையில் கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக சிறைத்துறை நிர்வாகம் கூறியது.

சந்தேகம்

இந்நிலையில் தற்காெலை செய்து கொண்ட ராம்குமாரின் வழக்கறிஞர் இராமராஜ் நெல்லை மாவட்டம் வட நத்தம் பட்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் போது தெரிவித்ததாவது,ராம்குமார் தற்கொலை வழக்கில் தொடர்புடைய பிரேத,விசாரணை அறிக்கை கடந்த 7 மாத காலமாக கிடைக்கவில்லை இதனால் நீதிதுறை,காவல்துறை, சிறைதுறை மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே விசாரணை நீதிபதி மீது செங்கோட்டை நீதிமன்றத்தில் கொலைவழக்கு தாக்கல் செய்யுள்ளதாகவும் சுவாதி கொலைவழக்கில் பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதால் சிபிஐ அல்லது தேசிய புலனாய்வு பிரிவு விசாரணை நடத்தவேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து