முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குறிஞ்சிப்பாடி வட்டாச்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி தொடக்கம்

வெள்ளிக்கிழமை, 26 மே 2017      கடலூர்
Image Unavailable

குறிஞ்சிப்பாடி வட்டாச்சியர் அலுவலகத்தில் 1426-ஆம் பசலிக்கான ஜமாபந்தி தொடக்க விழா  கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் விஜயா  தலைமையில் நடைபெற்றது.

 ஜமாபந்தி

இவ்விழா வருகின்ற ஜூன் 1ஆம் தேதிவரை நடைபெறுகிறது.இதை தொடர்ந்து நேற்று நடந்த ஜமாபந்தியில் குறிஞ்சிப்பாடி குருவட்ட கிராமம் மருவாய்,நைனாக்குப்பம்,பார்வதிபுரம், குருவப்பன்பேட்டை,மேலப்புதுப்பேட்டை,பூதம்பாடி,சேராக்குப்பம்,கொளக்குடி,கொத்தவாச்சேரி,குறிஞ்சிப்பாடி (வடக்கு)போன்ற ஊர்களை சேர்ந்த பொது மக்கள் தங்கள் தேவைகளை  மனுக்களாக கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் விஜயா அவர்களிடம்  மனுக்களை கொடுத்தனர்.இதில் 149 மனுக்கள் ஏற்க்கப்பட்டு பரிசீலனையில் உள்ளது.

பலர் பங்கேற்பு

இந்நிகழ்ச்சியில் குறிஞ்சிப்பாடி வட்டாச்சியர் ஜான்சிராணி ,தலைமை உதவி அலுவலர் செல்வி சுமித்திரா, துணை வட்டாச்சியர் ஆனந்த்,குறிஞ்சிப்பாடி வருவாய் ஆய்வாளர் கௌரி,குள்ளஞ்சாவடி வருவாய் ஆய்வாளர் விஜயலட்சுமி, கிராமாக நிர்வாக அலுவலர்களின் சங்க மாநிலத் தலைவர் சந்தானகிருஷ்ணன்,மாவட்ட தலைவர் விஷ்வநாதன்,மற்றும் அனைத்து துறையை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து