முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மயிலாடுதுறை ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகள் : கலெக்டர் பழனிசாமி ஆய்வு செய்தார்

வெள்ளிக்கிழமை, 26 மே 2017      நாகப்பட்டினம்
Image Unavailable

 

மயிலாடுதுறை ஒன்றியம் மணக்குடி கிராமத்தில் காவிரி வடிநிலக் கோட்டம்(கிழக்கு) சார்பில் மேலையூர் வாய்க்கால் தலைப்பு மதகு மற்றும் மாப்படுகை கிராமம் முத்தப்பன் காவிரி வாய்க்கால் தலைப்பு மதகு ஆகியவற்றில் குடிமராமத்துப் பணிகள்(2016-17) திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும பழுது நீக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் சு.பழனிசாமி, பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

குடிநீர் பிரச்சனை

ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது,

 "2016 - ஆம் ஆண்டு வடகிழக்கு பருவ மழை தவறியதால் இதுவரை இல்லாத அளவிற்கு வறட்சி தமிழ்நாட்டில் நிலவுகிறது இந்த வறட்சியை சமாளிக்கும் பொருட்டு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குடிநீர் பிரச்சனையை தீர்க்க நீர் ஆதாரங்களை மேற்கொள்ளஏற்கனவே தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

 குடிமராமத்து திட்டத்தில் வரத்து வாய்க்கால் மற்றும் கால்வாய்கள், ஏரிகள் மதகுகள் மற்றும் பிற நீர் நிலைகள் ஆகியவற்றை புனரமைத்தல், பலப்படுத்துதல் மற்றும் கலிங்குகள், மதகுகளை கட்டுமானம் செய்தல், நீர் வழிகளில் அடைத்திருக்கும் செடிகளை அகற்றுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளபடவுள்ளன. இப்பணிகளில் ரூபாய் 10.00 இலட்சத்திற்கும் குறைவான மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் பணிகள் விவாய சங்கங்கள,; பாசன சபைகள், ஆயக்கட்டுத்தாரர் மற்றும் ஆயக்கட்டுதார்ரகளின் தொகுப்பின் மூலம் நேரடி நியமன அடிப்படையில் அவர்களாலேயே மேற்கொள்ளப்படும். இப்பணிகள் பொதுப்பணித்துறையால் திட்டம் தயாரிக்கப்பட்டு பொதுமக்களால் செயல்படுத்தப்படும் பணிகள் பொதுப்பணித்துறையால் கண்காணிக்கப்படும். மேலும் ரூபாய் 10.00 இலட்சத்திற்கும் மேற்பட்ட பணிகள் நீர்வள ஆதாரத்துறையின் மூலம் நடைமுறையில் உள்ள ஒப்பந்தப்புள்ளி விதிமுறைகளின்படி செயல்படுத்தப்படும்

மொத்த மதிப்பீட்டில் பத்து சதவீதம் மதிப்பீட்டுத் தொகை பாசன சங்கங்களிலிருந்து உழைப்பாகவோ, பொருளாகவோ அல்லது பணப்பங்களிப்பாகவோ பெறப்பட்டு பணிகளை அவர்களே மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது

குடிமராமத்து திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம்; மாவட்டத்தில் 61 பணிகள் ரூபாய் 491.00 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றது. இதில் இக்கோட்டத்தின் மூலம் 31 பணிகள் ரூபாய் 255.00 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றது." என தெரிவித்தார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து