முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளி சத்துணவு மைய அமைப்பாளர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் : கலெக்டர் (பொ) தனசேகரன் தகவல்

வெள்ளிக்கிழமை, 26 மே 2017      அரியலூர்

 

அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்ட பள்ளி சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள 138 சத்துணவு அமைப்பாளர்கள் காலிப் பணியிடங்களுக்கு ரூ.2500-5000-தரஊதியம் ரூ.500- என்ற சிறப்பு ஊதிய விகிதத்தின் கீழ் நேரடி நியமனம் மூலம் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து கீழ்காணும் நிபந்தனைகளுக்குட்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிபந்தனைகள்:- மேற்படி சத்துணவு அமைப்பாளர் பதவிக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் அலுவலக வேலை நேரங்களினல் பெற்றுக் கொள்ளப்படும். விண்ணப்பங்கள் தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் 09.06.2017 மாலை 3.00 மணி வரை பெற்றுக் கொள்ளப்படும். குறிப்பிட்ட நேரத்திற்கு பின்வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது பதிவுத்தபால் மூலமோ வழங்கப்பட வேண்டும். இதற்கு முன்னர் ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் உரிய முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

வயது மற்றும் கல்வித்தகுதி :- 1. பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் - வயது - 01.06.2017 அன்று 21 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதிற்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும், கல்வித்தகுதி - 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2. பழங்குடிடியினர் - வயது - 01.06.2017 அன்று 21 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதிற்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும், கல்வித்தகுதி - 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றிருக்க வேண்டும்.

முன்னுரிமை மற்றும் இட ஒதுக்கீட்டில் விண்ணப்பிப்பவர்கள் அதற்கான சான்றிதழ்கள் உரிய அலுவலலரின் சான்றொப்;பத்துடன் (யுவவநளவநன) சமர்ப்பிக்க வேண்டும். நியமனப் பணியிடத்திற்கும் விண்ணப்பதாரர் குடியிருப்புக்கும் இடையே உள்ள தூரம் 3 கி.மீ-க்குள் இருக்க வேண்டும். காலிப்பணியிட விபரங்கள் மற்றும் இனசுழற்சி விபரங்கள் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலக தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்ட கலெக்டர் அவர்களின் அறிவிக்கையில் வெளியிடப்பட்டுள்ளவாறு தகுதியுள்ள பெண்கள் 09.06.2017-க்கு முன்னர் உரிய விண்ணப்பங்கள் அனுப்பி வைக்க மாவட்ட கலெக்டர் (பொ) எஸ்.தனசேகரன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து