முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் : கலெக்டர் (பொ) சூர்யபிரகாஷ் தலைமையில் நடந்தது

வெள்ளிக்கிழமை, 26 மே 2017      கரூர்
Image Unavailable

கரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் (பொ) .சூர்யபிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகளிடம் மனுக்கள் பெற்று மனுதாரர் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்திரவிட்டு மாவட்ட கலெக்டர் (பொ) தெரிவிக்கையில்,

மழையளவு

கரூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 652.20 மி.மீ ஆகும். மே-மாதம் முடிய கிடைக்க வேண்டிய சராசரி மழையளவு 126.30 மி.மீ இதுவரை 144.41 மி.மீ மழை கிடைக்கப் பெற்றுள்ளது. 2016-17ல் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் சம்பா நெல் பயிரில் விதைப்பு பொய்ப்பு இனத்தில் (Pசநஎநவெiஎந ளுழறiபெ) 2416 விவசாயிகளுக்கு ரூ.302.54 இலட்சம் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் மூலம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 2015-16ஆம் ஆண்டு தேசிய வேளாண் காப்பீட்டுத்திட்டத்தின் மூலம் ராபி பருவத்தில் காப்பீடு செய்த 144 விவசாயிகளுக்கு ரூ.1.79 இலட்சம் அரசிடமிருந்து ஒப்புதல் பெறப்பட்டு, வங்கி கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அனைத்து வட்டாரங்களிலும் உளுந்து விபிஎன்.5, விபிஎன்.6, துவரை கோ.(ஆர்.ஜி).7, பாசிப்பயறு கோ-8 மொத்தம் 11.14 மெ.டன் பயறு வகை விதைகள் மற்றும் நிலக்கடலை கே.6 விதை இரகம் இருப்பு வைக்கப்பட்டு மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நுண்ணீர் பாசன இயக்கத்திட்டத்தின் கீழ் வேளாண்மைத்துறைக்கு நடப்பாண்டு பொருள் இலக்கு 840 ஹெக்டேர் மற்றும் நிதி ஒதுக்கீடு ரூ.286.14 இலட்சம் பெறப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் அனைத்து தனியார் உரக்கடைகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்சங்கத்தில் யூரியா-544 மெ.டன், டிஏபி-386 மெ.டன், பொட்டாஷ்-555 மெ.டன், கலப்பு உரம் - 901 மெ.டன் இருப்பில் உள்ளது.

நடப்பு ஆண்டு மண்வள அட்டை இயக்கத்தின் கீழ் 10893 மண்மாதிரிகள் இலக்கீடு பெறப்பட்டு இதுவரை 3092 மண்மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டிற்கு குறைந்த தண்ணீரில் அதிக பரப்பளவில் தோட்டக்கலைப்பயிர்கள் சாகுபடி செய்வதற்கு ஏதுவாக நுண்ணீர் பாசனக் கருவிகள் சிறுஃகுறு விவசாயிகளுக்கு 100 சத மான்யத்திலும், இதர விவசாயிகளுக்கு 75மூ மானியத்தில் அரசு அங்கீகரிக்கப்பட்ட நுண்ணீர்பாசன நிறுவனத்தின் மூலம் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் சிறப்பினத்தின் கீழ் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 100மூ மற்றும் 75மூ மான்யத்தில் சொட்டுநீர் பாசனம் அமைத்து தரப்படவுள்ளது.

இதற்காக ரூ.570.00 லட்சம் இத்திட்டத்தில் பெறப்பட்டுள்ளது. மானாவாரி பரப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மரவள்ளி சார்ந்த தோட்டக்கலை பயிர் சார்ந்த பண்ணையம் அமைத்தல், (மரவள்ளி), மண்புழு உரக்கூடாரம் அமைத்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. எனவே பழச்செடிகள், காய்கறிவிதைகள் மற்றும் நுண்ணீர் பாசனக்கருவிகள் தேவைப்படும் விவசாயிகள் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் அலுவலகத்தை அணுகி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேளாண்மை பொறியியல் துறை:-தமிழக முதல்வரின் சிறப்புத் திட்டமான பாசனத்திற்கான சோலார் மின் பம்புகளுடன்; நுண்ணீர் பாசன வசதி அமைத்துக் கொடுக்கும் திட்டத்தின்கீழ் 2016-17ம் நிதியாண்டில் ஆழ்குழாய் கிணறு பிரிவில் சோலார் பம்ப்செட் 10 எண்கள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 9 எண்கள் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 1 எண் சோலார் பம்புசெட் பணி நடப்பு நிதியாண்டில் (2017-18) அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.நீடித்த தேசிய வேளாண் இயக்கம்2016-17 திட்டத்தின் கீழ் நீர் அறுவடைக் கட்டுமானங்கள் தடுப்பணைகள் 4 எண்கள் ரூ.18.00 இலட்சத்தில் அமைத்திட இலக்கு பெறப்பட்டு பணிகள் விரைந்து தொடங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வேளாண் விற்பனை மற்றும் வணிகம்:-.கரூர் மாவட்டத்தில் விவசாயிகளின் ஆன்ட்ராய்டு மொபைலில் "கிஸான் சுவேதா மொபைல் ஆப்ஸ்" பதிவிறக்கம் செய்யப்பட்டு அதன் மூலம் விவசாயிகள் விவசாயத்திற்கு தேவையான அடிப்படை தகவல்களான மழையளவு, பருவநிலை மாற்றம், விளை பொருட்களுக்கான சந்தை நிலவரம், தொழில்நுட்ப செய்திகள், பயிர்பாதுகாப்பு பற்றி விபரங்கள் ஆகியவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள வட்டார வாரியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கரூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு அதிக பட்சம் ரூ.2.00 இலட்சம் பொருளீட்டுக்கடன் 5மூ வட்டியிலும், வியாபாரிகளுக்கு 9மூ வட்டியில் அதிக பட்சம் ரூ.2.00 இலட்சம் பொருளீட்டுக்கடன் பெறலாம். மேலும் இராயனூரில் உள்ள குளிர்பதனக் கிடங்கின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை சேமித்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது. எனவே, கரூர் மாவட்ட விவசாயிகள் அந்தந்த துறையை அணுகி பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் (மு.கூ.பொ) கேட்டுக் கொள்கிறார்.

இக்கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர், .அல்தாப், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை), கு.பா.ஜெயந்தி, முன்னோடி விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து