மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

வெள்ளிக்கிழமை, 26 மே 2017      விழுப்புரம்
senji amavasai oonjal ursavam 2017 05 26

செஞ்சியை அடுத்துள்ள பிரசித்தி பெற்ற கோயில் தளமாக விளங்கும் மேல்மலையனூர் அருள்மி்கு அங்காளம்மன் கோயிலில் வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவ திருவிழா வியாழன் இரவு நடைபெற்றது.

 ஊஞ்சல் உற்சவம்

மாதந்தோறும் நடைபெறும் அமாவாசை ஊஞ்சல் உற்சவசத்தில் தமிழ்நாட்டின் பல் வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்றும் புதுச்சேரி, பெங்களூர் ஆகிய பகுதிகளில்இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். வியாழன் இரவு நடைபெற்ற பங்குனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் உற்சவத்தை காண காலை முதலே பக்தர்கள் கூட்டம் கோயிலில் குவிந்த வண்ணம் இருந்தனர்.

சிறப்பு அபிஷேகம்

அன்று விடியற்காலை கோயில் நடை திறக்கப்பட்டு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. இரவு 11.30 மணிக்கு தாமரை உள்ளிட்ட பல்வேறு மலர்களை கொண்டு அலங்கரிப்பட்ட உற்சவ அங்காளம்மன் மேளதாளம் முழங்க பக்தர்களின் பலத்த கரகோஷத்தினிடையே ஊஞ்சல் மண்டபத்தில் உள்ள ஊஞ்சலில் அமர்ந்து கூடியிருந்த ஆயிரகணக்கான பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

கற்பூரம் ஏற்றி

இதனை தொடர்ந்து கோயில் பூஜாரிகள் ஊஞ்சலை அசைத்தவாறு அம்மன் தாலாட்டு பாடல்களை பாடினர். அப்போது கூடியிருந்த பக்தர்கள் தங்கள் கைகளில் எலுமிச்சை மற்றும் தேங்காயில் கற்பூரம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை செஞ்சி டிஎஸ்பி. ரவிச்சந்திரன் தலைமையிலான போலீஸார் மற்றும் ஊர்காவல் படையினர் மேற்கொண்டனர். அரசு போக்குவரத்து கழகம்சிறப்பு பேரூந்துகளை இயக்கியது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ஏ.ஆர்.பிரகாஷ், கோயில் அறங்காவலர்கள் மற்றும் கோயில் பூசாரிகள் செய்திருந்தனர்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து