முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்: கலெக்டர் கே.விவேகானந்தன், தகவல்

வெள்ளிக்கிழமை, 26 மே 2017      தர்மபுரி

தருமபுரி மாவட்ட விவசாயிகள் நடப்பு காரிப் 2017 பருவத்தில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம் எனவும், சமீப ஆண்டுகளாக பருவநிலை மாற்றத்தால் சரியான பருவத்தில் பருவமழை பெய்யாமல் பொய்த்து விடுகிறது. இதனால் விவசாயிகள் சரியான பருவத்தில் பயிர் செய்ய இயலாமலும் விதைத்த பின்னர் பயிர்கள் காய்ந்தும் விடுகிறது. இதனால் விவசாயிகளுக்கு மகசூல் பாதிக்கப்பட்டு வருவாய் இழப்புக்குள்ளாகின்றனர்.

பயன்பெறலாம்
 இதேபோன்று புயல், சூறாவளி மற்றும் அதிகபடியான மழை ஆகிய இயற்கை இடர்பாடுகளிலிருந்து விவசாயிகளை காக்க பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் வழி செய்கிறது. இத்திட்டம் சென்ற வரும் காரிப் 2016 முதல் தருமபுரி மாவட்டத்தில் 15 பயிர்களுக்கு அறிவிக்கை செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

நடப்பு ஆண்டில் காரிப் 2017 பருவத்தில் நெல், சோளம், மக்காச்சோளம், கம்பு, இராகி, துவரை, உளுந்து, பாசிப்பயறு, காராமணி, நிலக்கடலை, கரும்பு, சூரியகாந்தி, எள் மற்றும் பருத்தி போன்ற 14 வேளாண்மைப் பயிர்களுக்கும், வாழை, மஞ்சள், மரவள்ளி மற்றும் வெங்காயம் போன்ற 4 தோட்டக்கலை பயிர்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.

உணவு தானியப் பயிர்கள், பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துப் பயிர்களுக்கு காப்பீட்டுத் தொகையில் 2.0 சதவீத பிரிமியமும், பருத்தி மற்றும் வருடாந்திர தோட்டக்கலை பயிருக்கு 5.0 சதவீத பிரியமும் செலுத்தப்பட வேண்டும். தற்பொழுது காரிப் பருவத்தில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் வரும் ஜூலை மாதம் 31-ம் தேதிக்குள்ளும் மற்றும் இதர உணவு தானிய பயிர்கள், பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் போன்ற பயிர்களுக்கு ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி வரையிலும் தோட்டக்கலை பயிர்களுக்கு 30.09.2017-ந்தேதி வரையிலும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயனடையலாம் என கலெக்டர் கே.விவேகானந்தன், தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து