முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் வா.சம்பத், தலைமையில் நடைபெற்றது

வெள்ளிக்கிழமை, 26 மே 2017      சேலம்
Image Unavailable

 

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (26.05.2017) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் திருவா.சம்பத், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது :

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தமிழக அரசால் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு தொலைநோக்கு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் இயல்பான ஆண்டு மழையளவு 997.9 மிமீ ஆகும். நடப்பு ஆண்டு குளிர்கால பருவத்தில் 11.6 மிமீ கிடைத்துள்ளது இது இயல்பாக குளிர்கால பருவத்தில் பெய்ய வேண்டிய மழை அளவை விட 4.4 மிமீ குறைவாகும். நடப்பு ஆண்டு (23.05.2017 முடிய) 162.6 மிமீ மழை பெறப்பட்டுள்ளது. இயல்பாக மே மாதம் முடிய பெய்ய வேண்டிய மழை அளவான 186.8 மிமீ அளவைவிட 24.2 மிமீ க்கு குறைவாக நடப்பு ஆண்டில் பெய்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் 2017-18ம் வேளாண் திட்ட பணிகளின் முன்னேற்திக்கான விதை நெல் இருப்பு 261 மெ.டன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 1.973 மெ.டன் நெல் விதைகள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது மேலும் 319.459 மெ.டன் இருப்பு உள்ளது. சிறுதானியங்கள் 39.00 மெ.டன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 0.528 மெ.டன் சிறுதானியம் விதைகள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 24.358 மெ.டன் இருப்பு உள்ளது. பயறு வகைகள் 236.00 மெ.டன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 24.500 மெ.டன் பயறு வகை விதைகள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 60.158 பயறு வகையில் இருப்பு உள்ளது. எண்ணெய் வித்துகள் 157.00 மெ.டன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 12.250 மெ.டன் எண்ணெய் வித்து விதைகள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 46.200 மெ.டன் எண்ணெய் வித்துகள் இருப்பு உள்ளது. பருத்தி 3.00 மெ.டன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், இரசாயன உரங்கள் வேளாண் திட்டங்களின் முன்னேற்றம் 2017-18 ஆண்டுக்கான யூரியா 41,000 மெ.டன் இலக்கு நிர்ணக்கப்பட்டு 1114 மெ.டன் யூரியா உரங்கள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. டி.ஏ.பி. 20,100 மெ.டன் இலக்கு நிர்ணக்கப்பட்டு 573 மெ.டன் டி.ஏ.பி உரங்கள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. பொட்டாஷ் 35,855 மெ.டன் இலக்கு நிர்ணக்கப்பட்டு 799 மெ.டன் பொட்டாஷ் உரங்கள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. கலப்பு உரங்கள் 43,400 மெ.டன் இலக்கு நிர்ணக்கப்பட்டு 1,282 மெ.டன் கலப்பு உரங்கள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 140,355 மெ.டன் இருப்பு இலக்கு நிர்ணக்கப்பட்டு 3,768 மெ.டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது எனவே, வேளாண் திட்டப்பணிகளின் முன்னேற்திக்கான விதை மற்றும் உரம் தயார்நிலையில் இருப்பு உள்ளது. இவ்வாறு கலெக்டர் வா.சம்பத், தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் சௌந்தரராஜன், முன்னோடி வங்கி மேலாளர் உதயகுமார் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து