முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய பொலிவுடன் நம்பியூர் வேளாண்மை விரிவாக்க மையம் விவசாயிகள் மானியம் பெற முன்னுரிமைப் பதிவேடு - ஏற்பாடு

வெள்ளிக்கிழமை, 26 மே 2017      ஈரோடு
Image Unavailable

தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை மூலம் உரம் , விதை , நுண்ணுட்டம் , மருந்துகள் போன்ற இடுபொருள்கள் விநியோகம் செய்யவும் , விவசாயிகளுக்கு பல்வேறு பயிர்சாகுபடி  குறித்த நவீன தொழில்நுட்பங்களை எடுத்துக்கூறவும் 385 ஊராட்சி ஒன்றியங்களிலும் வேளாண்மை விரிவாக்க மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

500 துணை வேளாண்மை விவாக்க மையங்கள்

இது தவிர 500 க்கும் மேற்பட்ட துணை வேளாண்மை விரிவாக்க மையங்களும் உள்ளன. ஈரோடு மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் , வட்டார தலைமையிடத்தில்  வேளாண்மை விரிவாக்க மையங்கள் அமைந்துள்ளன. அதன்படி நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்தில் நம்பியூரில் அமைந்துள்ள வேளாண்மை விரிவாக்க மையம் புதிய வண்ணம் பூசப்பட்டு பல்வேறு வாசகங்களுடன் , மெருகூட்டப்பட்டுள்ளது. இது குறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூறியதாவது.

நோய் தடுப்பு முறைகள்

‘ நம்பியூர்  வானம் பார்த்த பூமி அதிகம் உள்ள வட்டாரமாக உள்ளதால் , விவசாயிகளுக்கு மானாவாரி தொழில் நுட்பங்களையும் , உயிரியல் முறையில் பூச்சி , நோய் தடுப்புமுறைகளையும் எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் , சுவற்றில் பல்வேறு வண்ணங்களில் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. மேலும் , உரம், விதைகள் விநியோகிக்கும் இடமாக மட்டும் அல்லாமல் விவசாயிகளுக்கு நவீன தொழில் நுட்பச் செய்திகளையும் , மத்திய , மாநில அரசுகளின் மானியம் குறித்தான செய்திகளை வழங்கும் தகவல் மையமாகவும் விளங்கும் வகையில் சுவர் எழுத்து விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன.

கருவிகள்

மேலும் , விவசாயிகள் மானியம் , இடுபொருள்கள் குறித்தான தேவை குறித்து தனியாக முன்னுரிமைப் பதிவேடு பராமரிக்கப்படுவதாகவும் , அதன் படி வரிசைக் கிரமமாக  மானியம் , கருவிகள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தனர். இது குறித்து நம்பியூர் வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி தெரிவிக்கையில் , நடப்பு ஆண்டில் அமல்படுத்தப்படும் புதிய பயிர்காப்பீட்டுத்திட்டம் குறித்தும் பவானிசாகர் அணை நீர் மட்டம் , மழை அளவு போன்ற பிற விவரங்கள் குறித்தும் விவசாயிகள் அறிந்து கொள்ள ஏதுவாக  நம்பியூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் தகவல் மற்றும் வரவேற்பு மையம் அமைக்கப்படும் . இது விவசாயிகளுக்கு பெரிதும் பயனள்ளதாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து