முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வால்பாறையில் கோடை விழா : சட்டப்பேரவை துணை தலைவர் பொள்ளாச்சி.வ.ஜெயராமன் தொடங்கி வைத்து விழா பேருரை

வெள்ளிக்கிழமை, 26 மே 2017      நீலகிரி
Image Unavailable

வால்பாறையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கோடை விழா 2017 இன்று சார் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

விவசாயம் செய்ய முடிகிறது

முன்னதாக தமிழ்நாடு சட்டப்பேரவை துணை தலைவர் பொள்ளாச்சி.வ.ஜெயராமன் கொடியேற்றி வைத்து தோட்டக்கலை துறை, வனத்துறை, பல்வேறு கண்காட்சி அரங்குகளை திறந்துவைத்து விழாமேடையில், விழா பேருரையாற்றினார். அப்போது அவர்பேசும்போது வால்பாறை மலை பகுதியில் இருந்து உற்பத்தியாகும் நீரினால்தான் கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் விவசாயம் செய்யமுடிகிறது. இவ்விருமாவட்டத்தின் மக்கள் வாழ்வாதரமே மலைப் பகுதிகளிலிருந்து வரும் நீர், நிலைகளினால்தான் ஆகவே வால்பாறை பகுதியை மேம்படுத்த . அம்மா அரசு தொடர்ந்து நல்லமுயற்சிகளை மேற்கொண்டு படகு இல்லம், தாவரவியல் பூங்கா, தோட்டத் தொழிலாளர்களுக்கு நிரந்தர குடியிருப்பு மற்றும் தொழிலாளர்களின் சம்பளம் உள்ளிட்ட அனைத்திலும் தனிகவனம் செலுத்தி வருகிறது. என்று கூறினார். இன்று நடைபெற்ற கோடை விழா நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் வரவேற்புரையுடன் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, நகர கூட்டுறவு வங்கி தலைவர். வால்பாறை.வீ.அமீது, நகர கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் மயில்கணேசன், மற்றும் அரசு சார்ந்த பல்வேறு துறை அதிகாரிகளும்திரளாக கலந்துகொண்டனர். நிகழச்சி முடிவில் வால்பாறை நகராட்சி ஆணையாளர் கண்ணன் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து