முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா கனவுத்திட்டங்கள் ஒவ்வொன்றையும் முதலமைச்சர் திறம்பட செயல்படுத்தி வருகிறார் அமைச்சர்கள் ஆர்.காமராஜ், எஸ்.பி.வேலுமணி புகழாராம்

வெள்ளிக்கிழமை, 26 மே 2017      கோவை
Image Unavailable


கோயம்புத்தூர் ஜென்னிகிளப் கூட்டரங்கில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் மூலம் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் முழு கணினி மயமாக்கல் முன்னேற்றம் குறித்து 8 மாவட்டங்களுக்கான (கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், திருப்பூர், நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி) ஆய்வுக் கூட்டம் கூட்டறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு முதன்மை செயலர் பிரதீப்யாதவ்  , உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலர் மற்றும் ஆணையாளர் (பொறுப்பு) கே.கோபால்  , கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஞானசேகரன்  , மாவட்ட கலெக்டர் த.ந.ஹரிஹரன்   ஆகியோர் முன்னிலையில்   உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் ,  நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

சிமார்ட் கார்டு

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கனவுத்திட்டமாக திகழ்ந்து வந்த சுமார்ட் கார்டு வழங்கும் திட்டம் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில்  தமிழ்நாடு முதலமைச்சர்  சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். இத்திட்டத்தின் நோக்கம் ஒவ்வொரு குடும்ப அட்டை தாரரும் தங்களுக்கு வேண்டிய பொருட்கள் பெறுவது மட்டுமின்றி அதன் இருப்பு விவரம் குறித்து தெரிந்து கொள்வதுடன் குடோனில் இருந்து விற்பனை நிலையத்திற்கு வருகின்ற வரை அதன் நிலை குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் தற்பொழுது அதன் செயல்பாடுகள் குறித்து கணினி மயமாக்குபப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். பொது விநியோகத்திட்ட கணினி மயமாக்கல் தொடர்பாக அலுவலர்கள் பயன்படுத்தக் கூடிய பு2புஇ ஆஐளு  மற்றும் பொது மக்கள் பயன்படுத்தக் கூடிய வnpனள  ஆகிய வலைதளங்களை பயன்படுத்தி பொதுமக்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகளை விரைவில் வழங்கிட எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசணை வழங்கப்பட்டது.

இ-சேவை

குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கான மின்னணு அட்டைகள் பெற்றபின் அதில் மாற்றங்கள் தேவைப்படின், கைப்பேசி செயலி பொது மக்களுக்கான வலைதளம் (வnpனள.பழஎ.in) மற்றும் உதவி ஆணையாளர்கள் ஃ வட்ட வழங்கல் அலுவலகங்களில் செய்து கொள்ளலாம். தேவைக்கேற்ப மாற்றம் செய்தபின் புதிய மின்னணு அட்டையை அரசு இ-சேவை மையங்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என  அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் தமிழ்நாட்டில் புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு பதிலாக இதுவரை, 86 இலட்சத்து 18 ஆயிரம் புதிய மின்னணு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள மின்னணு அட்டைகளை வழங்கும் பணி விரைந்து நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 1 கோடியே 90 இலட்சத்து 80 ஆயிரத்து 693 குடும்ப அட்டைகளில், 1 கோடியே 37 இலட்சத்து 34 ஆயிரத்து 615 அட்டைகளுக்கு ஆதார் அட்டை விவரங்கள் முழுவதுமாகவும், 51 இலட்சத்து 59 ஆயிரத்து 482 அட்டைகளுக்கு பகுதியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 1 இலட்சத்து 96 ஆயிரத்து 596 அட்டைகளுக்கு ஆதார் அட்டை விவரங்கள் பதிவு செய்யப்பட பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் தொடர்பாக மண்டல வாரியாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று கோயம்புத்தூர் மண்டலத்தில் 8 மாவட்டங்களுக்கு ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கோயம்புத்தூர் மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 9 இலட்சத்து 50 ஆயிரம் குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் 3 இலட்சத்து 53 ஆயிரம் குடும்ப அட்டை தாரர்களுக்கு சுமார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள குடும்ப அட்டை தாரர்களுக்கு சுமார்ட் கார்டு பணி நடைபெற்று வருகின்றது என  உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.காமராஜ்  தெரிவித்தார்.

ரூ.330 கோடி

புரட்சித்தலைவி அம்மா  எந்த மாநிலத்திலுமே இத்திட்டம் அறிமுகப்படுத்தாத நிலையில் முதன்முதலாக தமிழகத்தில் இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.330 கோடி முதற்கட்டமாக நிதி ஒதுக்கி சுமார்ட் கார்டு வழங்குவதற்கான பணியினை துவக்கி வைத்தார்கள். முந்தைய ஆட்சியாளர்கள் உள்தாள் ஒட்டும் பணியைத்தான் செய்தார்கள் அதை மாற்றி பொது மக்களின் பயனுள்ள திட்டமாக திகழ வேண்டும் என்பதே  அம்மா அவர்களின் இலட்சியமாக திகழ்ந்து வந்தது. அந்த இலட்சியத்தை இன்றைக்கு  புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தலைமையில் செயல்பட்டு வரும் முதலமைச்சர்  சுமார்ட் கார்டு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்புடன் செயல்படுத்தபட்டு வருகிறது. குறிப்பாக இத்துறையின் மூலம் செயல்பாடுகள் குறித்து கணினி மயமாக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு மிகப் பயனுள்ளதாக இருந்து வருகின்றன. மேலும்  அமைச்சர்  இத்துறையில் சிறப்பு கவனம் எடுத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள் குறிப்பாக மாவட்டங்களில் பொதுமக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு பகுதி நேரம் மற்றும் முழு நேர நியாயவிலைக்கடை அமைக்க கோரிக்கை வைத்தால் அதை உடனுக்குடன்  அமைச்சர்  செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் இந்தியாவில் எந்த மாநிலத்திலுமே இல்லாத அளவிற்கு தமிழகத்தில்தான் பொதுவிநியோகத்திட்டத்தின்  செயல்பாடுகள் சிறந்து விளங்குகின்றன என  நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் கே.அர்ச்சுனன், எட்டிமடை சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன், நுகர்வோர் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் வெங்கடப்பிரியா, கூட்டுறவு இணைப்பதிவாளர் பிரபு, மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணமூர்த்தி மற்றும் 8 மாவட்டங்களை சேர்ந்த வழங்கல் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து