முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவகாசி வட்டம், ஜமாபந்தி 35 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் சிவஞானம் வழங்கினார்கள்.

வெள்ளிக்கிழமை, 26 மே 2017      விருதுநகர்
Image Unavailable

    விருதுநகர்.-விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் சிவகாசி உள்வட்டத்திற்குட்பட்ட கிராம வருவாய் தீர்வாய கணக்கு தணிக்கை (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் 18.05.17 அன்று தொடங்கி 5 நாட்கள் நடைபெற்றது. யனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்கள்.
 இந்த தணிக்கையின் போது நேரடியாக பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித் தொகை, ஊனமுற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல் போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் பெறுவது தொடர்பான மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். அந்த மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மனுக்களை கொடுத்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு,  மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து சம்மந்தப்பட்ட நபர்களுக்கு தகவல்கள் தெரிவிக்கவும் உத்தரவிட்டிருந்தார்கள்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், வருவாய் தீர்வாய கணக்கு தணிக்கை (ஜமாபந்தி) சிவகாசி வட்டத்தில் 18.05.17 தொடங்கி 19.05.17 மற்றும் 23.05.17 முதல் 25.03.17 வரை 5 நாட்கள் நடைபெற்றது. வருவாய் தீர்வாய கணக்கு தணிக்கை (ஜமாபந்தி)-யில் பொது மக்கள் தங்களுக்கு தேவையான அரசின் நலத்திட்ட உதவிகள் பெற 231 மனுக்கள் வழங்கினார்கள். இதில் 35 மனுக்கள் தீர்வு காணப்பட்டு, பட்டா மாறுதல் ஆணை 11 நபர்களுக்கும், பாட்டா மாறுதல் உட்பிரிவு ஆணை 17 நபர்களுக்கும், நத்தம் பட்டா மாறுதல் ஆணை 3 நபர்களுக்கும், இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித்தொகை 3 நபர்களுக்கும், மாற்றுத்திறனாளி உதவித்தொகை 1 நபருக்கும் ஆக மொத்தம் 35 பயனாளிகளுக்கு இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இதில் தகுதியான நபர்களுக்கும் ஓரிரு நாட்களில் தீர்வு காணப்பட்டு நலத்திட்டங்கள் வழங்கப்படும் என தெரிவித்தார்கள்.
இந்த தணிக்கையின் போது உதவி இயக்குநர் (நில அளவை)  யோகராஜா, மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் (பொது)  ராஜா, வட்டாட்சியர்  ஸ்ரீதரன் உட்பட வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து