முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம் ஊராட்சி பகுதிகளில் சாலைபணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

சனிக்கிழமை, 27 மே 2017      மதுரை
Image Unavailable

ராமநாதபுரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப்பணிகளை மாவட்ட கலெக்டர்  முனைவர்.ச.நடராஜன் நேரடியாகச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.37 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள பெருவயல் முதல் தெற்கு பெருவயல்  வரை 1.6 கி.மீ நீளத்தில்  சாலைகள் அமைக்கும் பணியினையும், ரூ.88.55 லட்சம் மதிப்பீட்டில் 3 கி.மீ நீளத்தில் எருமைப்பட்டி முதல் பாப்பனேந்தல் வரை சாலைகள் அமைக்கும் பணிகளையும் மாவட்ட கலெக்டர் முனைவர் ச.நடராஜன் நேரில் சென்று பார்வையிட்டு சாலையின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.  மேலும் முன்னேற்றத்தில் உள்ள இதர பணிகளையும் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது செயற்பொறியாளர் சங்கரஜோதி, உதவி பொறியாளர் இளங்கோ உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து