முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரமலான் நோன்பு தொடங்கியது : மசூதிகளில் சிறப்பு தொழுகைகளில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 28 மே 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : இஸ்லாமியர்களின் புனித கடமைகளில் ஒன்றான ரமலான் நோன்பு தொடங்கியுள்ள நிலையில், அனைத்து மசூதிகளிலும் சிறப்பு தொழுகைகள் நடைபெற்று வருகின்றன.  இஸ்லாமியர்கள் ரம்ஜான் மாதத்தின் 30 நாள்களிலும் நோன்பிருந்து ஐந்து வேளை தொழுகை செய்வார்கள். மேலும் வானில் தோன்றும் பிறையை வைத்து ரம்ஜானுக்கு நோன்பு தொடங்கப்படுவது வழக்கம்.

இந்தாண்டு தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் ரம்ஜான் நோன்பு தொடங்குவதற்கான பிறை ஏதும் நேற்றுவரை தென்படவில்லை. எனவே ரம்ஜான் மாதத்தின் முதல் தேதியில் நோன்பு தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இஸ்லாமியர்கள் இன்று ரம்ஜான் நோன்பைத் தொடங்கினர். தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். நோன்பு இருக்கும் இஸ்லாமியர்களுக்கு சென்னையில் 'ஷஹர்' என்ற உணவு இலவசமாக வழங்க 60-க்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்தார்.  இதனிடையே, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மசூதியில் ஏரளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இளங்கடை, குளச்சல், தேங்காய்பட்டணம், உள்ளிட்ட அனைத்து இடங்களிலும், கேரளாவிலும் ஏரளமான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுக்கை நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து நேற்று மாலை இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியம், திருபாம்பரம் ஊராட்சியில், ரம்ஜான் பண்டிகைக்காக, பள்ளிவாசலுக்கு நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கான அரசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமைச்சர் ஆர்.காமராஜ், இஸ்லாமியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து