முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையில் கனமழை பலி 122 ஆக உயர்வு - மீட்புப் பணிக்கு நிவராணப் பொருட்களுடன் 3 போர்க்கப்பல்களை அனுப்பியது இந்தியா

ஞாயிற்றுக்கிழமை, 28 மே 2017      உலகம்
Image Unavailable

கொழும்பு : இலங்கையில் பெய்து வரும் கனமழையால் பலியானோர் எண்ணிக்கை 122ஆக உயர்ந்துள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு, இந்தியா உதவி செய்யும் வகையில் போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளது.

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொட்டி வரும் மழையால் நாட்டின் தென்மேற்கு பகுதி முழுவதும் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. சுமார் 14 மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. ஆங்காங்கே பயங்கரமான நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 122 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 150 பேர் மாயமாகியுள்ளனர். ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் செல்வதால், குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இங்கு மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் இலங்கையின் முப்படையினர் மீட்புபணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 நிவாரணபொருட்களுடன் 3 போர்க்கப்பல்கள்

இயற்கை பேரிடரில் சிக்கியுள்ள இலங்கைக்கு உதவுமாறு ஐ.நா மற்றும் அண்டை நாடுகளுக்கு இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளது. அதன்படி இலங்கையின் துயர்நீக்கும் பணிகளில் இந்தியா இறங்கி உள்ளது. இந்திய கடற்படைக்கு சொந்தமான 3 போர்க்கப்பல்கள் நிவாரணபொருட்களுடன் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதில் ஐ.என்.எஸ். கிரிச் போர்க்கப்பல் நேற்று காலையில் கொழும்பு துறைமுகத்தை சென்றடைந்தது. மேலும் ஏராளமான நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டன. இதே போல் ஐ.என்.எஸ்.ஸர்துல் மற்றும் ஐ.என்.எஸ்.ஜலஸ்வா ஆகிய 2 போர்க்கப்பல்களும் இன்று இலங்கை சென்றடையும் என தகவல் வெளியாகியுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து