முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சினிமாவிற்கு வருகிறார் கிரிகெட் வீரர் ஸ்ரீசாந்த்

ஞாயிற்றுக்கிழமை, 28 மே 2017      சினிமா
Image Unavailable

Source: provided

ரெட் கார்பட் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ராஜ் ஜக்காரியாஸ் மிக பிரமாண்டமாக தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் தயாரிக்கும் படத்திற்கு “ டீம் 5 “ என்று பெயரிட்டுள்ளார்.

பிரபல இந்திய கிரிகெட் வீரர் ஸ்ரீசாந்த் இந்த படத்தின் மூலம் சினிமாவில் நாயகனாக கால்பதிக்கிறார். நாயகியாக நிக்கிகல்ராணி நடிக்கிறார். மற்றும் மலையாளத்தின் முன்னணி நாயகியான பேர்லேமேனி இன்னொரு நாயகியாகவும், மாராட்டியின் முன்னணி நடிகரான தேஷ் பாண்டே முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஒளிப்பதிவு - சைஜித் / இசை - கோபிசுந்தர் வசனம் - நந்து கிஷோர் / பாடல்கள் - வைரபாரதி எடிட்டிங் - திலீப் / டான்ஸ் - அமீர் கதை, திரைக்கதை, இயக்கம் - சுரேஷ் கோவிந்த். தயாரிப்பு - ராஜ் ஜக்காரியாஸ் படம் பற்றி இயக்குனர் கூறும்போது...

இந்த படம் இந்திய சினிமாவிற்கு புது மாதிரியான கதையம்சம் கொண்ட படமாக இருக்கும். பைக் ஸ்டன்டை மையமாக வைத்து இந்த கதை உருவாக்கப் பட்டுள்ளது. இந்தியாவில் பைக் ஸ்டன்ட் ஒரு தேசிய விளையாட்டாக அங்கீகரிக்கப் பட்டு அதற்கு விருதுகளும், பரிசுகளும் வழங்கப் பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த விஷயம் மக்களுக்கு பெரிதாக போய் சேர வில்லை. இந்த படத்தின் மூலம் இப்படி ஒரு விளையாட்டு இருக்கிறது என்று மக்களுக்கு தெரியவரும்.ஒரு குழுவிற்கு ஐந்து பேர் இருப்பார்கள்.

இது போல் பல குழுக்கள் இருக்கும். அதில் ரேஸ், வீலிங் போன்ற சாகசங்களும் இடம்பெறும். இதில் வெல்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப் படும். ஸ்ரீசாந்த், நிக்கிகல்ராணி, பேர்லேமேனி, தேஷ் பாண்டே இந்த நான்கு நண்பர்களுக்குள் நடக்கும் சம்பவங்கள் மற்றும் காதல், காமெடி, ஆக்ஷன், செண்டிமெண்ட் கலந்து உருவாகி வருகிறது. படம் ஜூன் மாதம் ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் வெளியாகிறது.படப்பிடிப்பு கொச்சி, பெங்களூர், கோவா, ஆஸ்த்ரேலியா போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.புது மாதிரியான எந்த கதையையும் மக்கள் வரவேற்பார்கள். இந்த கதையையும் மக்கள் நிச்சயம் வரவேற்பார்கள் என்றார் இயக்குனர் சுரேஷ்கோவிந்த்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து