விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது.

ஞாயிற்றுக்கிழமை, 28 மே 2017      விழுப்புரம்
viluppuram collector 2017 05-28

விழுப்புரம் மாவட்டம் மே 2017 மாத விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் .இல.சுப்பிரமணியன்,., தலைமையில், கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

 பயனாளிக்கு காசோலை

கூட்டத்தின் துவக்கத்தில் வேளாண்மை இணை இயக்குநர், விழுப்புரம் அனைத்து அலுவலர்களையும், விவசாய சங்க பிரதிநிதிகளையும் மற்றும் அனைத்து விவசாயிகளையும் வரவேற்றார். அடுத்ததாக கரும்பு பயிரில் மாநில அளவில் பயிர் அறுவடை மகசூல் போட்டியில் அதிக மகசூல் எடுத்த விவசாயியான எஸ்.பாண்டியன் என்பவருக்கு கலெக்டர் .இல.சுப்பிரமணியன்,., ரூ.25,000க்கான காசோலையை வழங்கினார்.

அதிக மகசூல் பெற

அடுத்ததாக உதவி பேராசிரியர், வேளாண்மை அறிவியல் நிலையம், திண்டிவனம்  ஏரியில் உள்ள வண்டல் மண்ணை எடுத்து விவசாயத்திற்கு பயன்படுத்தும் போது கனிமச்சத்து அதிகரிக்கிறது.  ஏரியில் வண்டல் மண் எடுப்பதன் மூலம் ஏரி ஆழப்படுத்தப்பட்டு அதிக அளவில் நிலத்தடிநீர் சேமிக்கப்படுகிறது.  மண்ணில் வாழும் நுண்ணுயிர்கள் அதிக அளவில் வண்டல் மண்ணில் உள்ளதால் உர அளவு குறைகிறது.  விதைக் கடினப்படுத்தி விதைப்பதன் மூலம் நீர் செலவு குறைகிறது.  வறட்சியில் உளுந்து பயிரில் கோ.8 ரகமும், தினை பயிர் கோ.7, கம்பு பயிரில் கோ.10 ரகங்களை தேர்வு செய்து பயிரிடுவதால் அதிக மகசூல் பெறமுடியும் என தெரிவித்தார்.

மண் எடுக்க அனுமதி

அடுத்ததாக கலெக்டர் விவசாய நிலங்களுக்கு வண்டல் மண் கட்டணமில்லாமல் அள்ள 27.04.2017 அன்று அரசாணை பெறப்பட்டுள்ளதாகவும், 2015 ஏரிகளும் 3 அணைகளும் வண்டல் மண் எடுப்பதற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  அப்படி எடுக்கும் வண்டல் மண்ணை விவசாய உபயோகத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் மண்பாண்டம் செய்பவர்கள் உபயோகிக்கலாம் மற்றும் வீட்டு உபயோகத்திற்கும் எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்தார்.

விவசாயிகள் வேண்டுகோள்

அடுத்ததாக விவசாயிகள் விவசாயத்திற்கு வறட்சிக்கு தகுந்தவாறு விளையக்கூடிய உரங்கள், விதைகள் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கவும், உரங்களின் விலை குறித்து விலைப் பட்டியல் வைக்கவும், விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கம், ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், தடுப்பணைகள் கட்டவும், விவசாயிகளுக்கு கூடுதலான அளவில் பயிர்க்கடன் அனைத்து பயிர்களுக்கும் வழங்கவும், பட்டாமாற்றம் விரைவாக செய்து கொடுக்கவும், தவறாக உள்ள பட்டா மாற்றத்தை திருத்தம் செய்யவும், மழையால் பாதிக்கப்பட்ட ரோடுகளை சீரமைக்கவும், காட்டுப்பன்றிகள் பயிர்களை நாசம் செய்வதை தடுக்கவும், வேளாண்மைத் துறை மூலம் விவசாயத்திற்கு வேளாண் கருவிகள் மானிய விலையில் வழங்கவும், நகரப்பேருந்துகளை முறையாக இயக்கவும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் விரைந்து வழங்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டனர்.  இறுதியாக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) நன்றி தெரிவித்தார்.

பலர் பங்கேற்பு

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜசேகரன், வேளாண்மை இணை இயக்குநர் கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ர.செல்வசேகர், ப.சுரேஷ், தமிழ்நாடு மின்சார வாரிய செயற் பொறியாளர் (விழுப்புரம்) சீனிவாசன், தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளர் (கள்ளக்குறிச்சி) அருட்பெருஞ்ஜோதி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பாலகிருஷ்ணன், செயற்பொறியாளர் (நீஆஅ) விழுப்புரம் சண்முகம், முன்னோடி வங்கி மேலாளர் ஆர்.சேதுராமன், அரசு அலுவலர்கள், விவசாய பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் 280க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து