முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெர்மானியர்கள் மோசமானவர்கள்: அதிபர் டொனால்ட் டிரம்ப் தாக்கு

ஞாயிற்றுக்கிழமை, 28 மே 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : ஜெர்மானியர்கள் மோசமானவர்கள் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்களுடனான சந்திப்பின்போது ஜெர்மானியர்களைப் பற்றி டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜெர்மனி பற்றி டிரம்ப் கூறியதாக ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், "ஜெர்மானியர்கள் மோசமானவர்கள், மிக மோசமானவர்கள். பாருங்கள் அவர்கள் லட்சக்கணக்கான கார்களை அமெரிக்காவில் இறக்குமதி செய்து லாபம் ஈட்டுகிறார்கள். இதை ஏற்றுக் கொள்ள முடியாது. உடனடியாக இதனை நிறுத்த வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, டிரம்ப் தனது பிரச்சாரங்களில் ஜெர்மனியையும், அந்நாட்டின் பிரதமர் ஏஞ்சலா மெர்கல்லையும் கடுமையாக விமர்சித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து