முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலரிப்பினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 28 மே 2017      கன்னியாகுமரி
Image Unavailable

கன்னியாகுமரி கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்  கடலரிப்பினால் பாதிக்கப்பட்ட மிடாலம் கல்லறைத்தோட்டம், மேல்மிடாலம், சின்னத்துறை, வள்ளவிளை ஆகிய இடங்களுக்கு நேரில்                     சென்று, பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தடுப்பு சுவர்

பின்னர், பூத்துறை என்ற இடத்தில் ரூ.7 இலட்சம் செலவில் நடைபெற்று வரும் கடலரிப்பு தடுப்பு சுவர் அமைக்கும் பணிகளையும், ரூ. 10 இலட்சம் செலவில், இரவிபுத்தன்துறை என்ற இடத்தில் நபார்டு திட்டத்தின்கீழ், நடைபெற்று வரும் கடலரிப்பு தடுப்பு சுவர் அமைக்கும் பணிகளையும்; பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைவில் முடித்திட, அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.  மேலும், ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால், கடலோர கிராமங்களில் தங்கியுள்ள பொதுமக்கள், மீனவர்கள் மற்றும் அவர்களது வீடுகளுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாதவாறு, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக, பசுமைகால நிதி திட்டத்தின்கீழ், நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரை கடல் அரிப்பு தடுப்புசுவர் அமைப்பதற்கு, மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு, மத்திய அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கையில் உள்ளது என கலெக்டர் அவர்கள் தெரிவித்தார்.

பலர் பங்கேற்பு

ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியரும் (வளர்ச்சி)   திட்ட இயக்குநருமான  ஏ.ஆர். ராகுல் நாத்  துணை இயக்குநர் (மீன்வளத்துறை)  லேமக் ஜெயகுமார், உதவி இயக்குநர் (மீன்வளத்துறை)  எஸ். ரூபர்ட் ஜோதி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கடலரிப்பு) கிறிஸ்து நேசகுமார், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள் (பொ))  மாடசாமி சுந்தர்ராஜ், உதவி செயற்பொறியாளர் வேதஅருள்சேகர், உதவி பொறியாளர்கள் தர்மோதரன், சஜயசெல்வம், ஜெரோன்ஜார்ஜ், பங்குதந்தைகள் ஷாபீன்லீன், பென்சகர், தார்வீன், ஜிம் ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து