முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு-காஷ்மீரில் கவர்னர் ஆட்சியை அமுல்படுத்த வேண்டும்: பரூக் அப்துல்லா

ஞாயிற்றுக்கிழமை, 28 மே 2017      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை காப்பாற்ற வேண்டுமென்றால் உடனடியாக மாநிலத்தில் கவர்னர் ஆட்சியை அமுல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரூக் அப்துல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் குறிப்பாக காஷ்மீரின் தெற்குபகுதியில் அமைதி சீர்குலைந்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் அந்த நாட்டில் இருந்து செயல்படும் தீவிரவாத இயக்கங்கள் ஒன்று சேர்ந்து காஷ்மீரில் இளைஞர்களை தூண்டிவிட்டு கலவரத்தில் ஈடுபட செய்கின்றனர். இதனால் அமைதி சீர்குலைந்துள்ளது. தினமும் பாகிஸ்தான் ராணுவமும் தீவிரவாதிகளும் ஊடுருவ முயற்சி செய்வதும் அதை தடுத்து நிறுத்துவதில் இந்திய ராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருவதும் வழக்கமாக இருந்து வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் 10 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். முஷாகிதீன் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்து புதிய கமாண்டரை துப்பாக்கி சண்டையின்போது  இந்திய ராணுவத்தினர் சுட்டுக்கொன்றுவிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதை ராணுவம் அடக்க முயன்றபோது நடந்த துப்பாக்கி சண்டையில் ஒரு இளைஞர் உயிரிழந்தார். இதனால் காஷ்மீர் பகுதியில் பதட்டம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை காப்பாற்ற வேண்டுமென்றால் மாநிலத்தில் கவர்னர் ஆட்சியை உடனடியாக மத்திய அரசு அமுல்படுத்த வேண்டும் என்று தேசிய மாநாடு கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா கோரியுள்ளார். மாநிலத்தில் கவர்னர் ஆட்சியை அமுல்படுத்த வேண்டும் என்று நாங்கள் எப்போதும் கூறுவதில்லை ஆனால் தற்போது மாநிலத்தில் கவர்னர் ஆட்சியை அமுல்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது என்று சமீபத்தில் ஸ்ரீநகர் பாராளுமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பரூக் அப்துல்லா நேற்று ஸ்ரீநகரில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். வெற்றிபெற்றவுடன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வுகாணுவது குறித்தும் மோடியுடன் பரூக் அப்துல்லா ஆலோசனை நடத்தினார்.

நான் பிரதமரை சந்தித்த விபரம் குறித்து வெளியே எதுவும் கூறமுடியாது. ஆனால் காஷ்மீர் விவகாரம் குறித்துதான் முழுவதும் விவாதிக்கப்பட்டது. பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வுகாண வேண்டும். மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும் முதல்வருமான மெஹ்பூபா ஆட்சியில் மாநிலத்தின் அனைத்து துறைகளிலும் தோல்வி ஏற்பட்டுள்ளது. காஷ்மீரின் தெற்கு பகுதி மட்டுமல்லாது காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் துயரச்சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனால் நாட்டின் இதர பகுதிகளிலும் வகுப்புவாத பதட்டம் ஏற்படும் அபாயம்  உருவாகியுள்ளதுஎன்றும் பரூக் அப்துல்லா மேலும் கூறியுள்ளார்.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து