முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர் மாவட்டத்தில் நடைப்பெறும் கோடைவிழாவில் முதல்வரரை சிறப்பு அழைப்பாளராக கொண்டு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 28 மே 2017      வேலூர்
Image Unavailable

 

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஏலகிரி மலையில் 27.05.2017 மற்றும் 28.05.2017 சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் ஏலகிரி கோடை விழா 2017 நடைபெற்று சிறப்புடன் நிறைவுபெற்றது. இந்த நிறைவு விழா நிகழ்ச்சிக்கு வேலூர் கலெக்டர் சி.அ.ராமன், தலைமை தாங்கினார

கலெக்டர் பேச்சு

இவ்விழாவிற்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெ.பெரியசாமி முன்னிலை வகித்தார்.இவ்விழாவில் கலெக்டர் பேசியதாவது.வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஏலகிரி மலையில் 27.05.2017 மற்றும் 28.05.2017 சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் ஏலகிரி கோடை விழா 2017 நடைபெற்று சிறப்புடன் நிறைவடைகிறது. இந்த விழா சிறப்புடன் நடைப்பெற பெரும் உதவியாக இருந்த வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி அவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த இரண்டு நாட்களும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிறப்பாக கோடைவிழாவிற்கு வருகை கண்டுகளித்தனர். இந்த கோடைவிழாவினை மேலும் சிறப்பாக நடத்த அடிப்படை வசதிகளில் நிறைகுறைகள் இருந்தாலும் இவைகள் அடுத்த ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பூர்த்தி செய்யப்படும். இந்த கோடை விழாவினால் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்திற்க்கும் உதவியாக இருக்கும். ஏலகிரி கோடைவிழாவிற்காக சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பேருந்து, சுகாதாரம், பாதுகாப்பு போன்ற பல்வேறு துறைகளின் சார்பாக அனைத்து விதமான வசதிகளும் செய்யப்பட்டது. இங்கு பல்வேறு துறைகளின் சார்பாக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது இவைகளும் ஒன்றொன்றுக்கு சிறப்பாக அமைந்திருந்தது. சுற்றுலா பயணிகளின் மகழ்ச்சிக்காக பல்வேறு கலைநிகழ்ச்சிகள் சிறப்புடன் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி நடத்த முழு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து அரசு அலுவலர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கலெக்டர் அவர்கள் விழாவில் பேசினார்.

அமைச்சர் பேச்சு

விழாவில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது.மறைந்த தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களின் அருளாசியோடு; வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் கோடை வாசஸ்தலமான ஏலகிரி மலையில் 2017 க்கான கோடைவிழா இரண்டு நாட்கள் நடத்தப்பட்டு இன்று சிறப்பாக முடிவடைகிறது. இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் இந்த கோடைவிழாவிற்கு வருகை தரும் சுற்றுலா பொதுமக்களை மகிழ்ச்சியுடன் கோடைவிழா கண்டுகளிக்க வேண்டும் என்ற விருந்தாளிகள் உபசரிக்கும் நோக்கத்தேர்டு இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்படுகிறது. எதிர்வரும் ஆண்டுகளில் நிகழ்ச்சிகள் மக்களின் எண்ணங்களுக்கு ஏற்ப மேலும் சிறப்பாக நடத்தப்படும், மேலும் அடுத்த ஆண்டு வேலூர் மாவட்டத்தில் நடைப்பெறும் கோடைவிழாவிற்கு தமிழக முதலமைச்சர் அவர்களை சிறப்பு அழைப்பாளராக கொண்டு நடத்த அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்ற உறுதியினையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த கோடை விழா சிறப்பாக நடைப்பெற மாவட்ட ஆட்;சித்தலைவர் அவர்கள் அனைத்துத்துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து கடந்த இரண்டு வாரத்திற்குள் இவ்வளவு சிறப்பாக நடத்தப்பட்டது. கோடைவிழாவில் பல்வேறு துறைகளின் சார்பாக பல்துறை கண்காட்சிகள் வெகுசிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. அரங்குகள் அமைத்த அனைத்து துறை அலுவலர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் இவ்விழாவிற்கு பாதுகாப்பு வசதிகளை வழங்கி காவல் துறையினருக்கும், போக்குவரத்து வசதிகளை வழங்கிய போக்குவரத:து துறையினருக்கும், சுகாதார வசதிகளை வழங்கிய சுகாதார துறையினருக்கம், மேலும் வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை நகராட்சித்நிர்வாகத்தினர் மற்றும் அனைத்து துறையினருக்கம் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக கோடைவிழா ஒரு வெற்றிவிழாகாக மாற்றிட்ட சுற்றுலா பயணிகளுக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டு அடுத்த ஆண்டு மேலும் சிறப்பாக கோடைவிழா நடத்த அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி விழாவில் பேசினார்.

கோடைவிழாவில் சிறப்பாக பல்துறை அரங்குகள் அமைத்த அரங்குகளில் வேளாண்மைத்துறைக்கு முதல்பரிசையும், பொதுசுகாதாரத்துறைக்கு இரண்டாம் பரிசையும், ஊரக வளர்ச்சித்துறைக்கு மூன்றம் பரிசையும், வனத்துறைக்கு சிறப்புபரிசையும், மேலும் விளையாட்டு துறை சார்பாக நடத்தப்பட்டு மராத்தான் போட்டி, படகு போட்டி, கயிறு இழுக்கும் போட்டி போன்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் பரிசுகளையும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மூலம் நடத்தப்பட்ட கொழுகொழு குழந்தைகள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும், கோடைவிழாவிற்காக பணியாற்றிய அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் நினைவு பரிசுகளையும் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி அவர்கள் வழங்கி பாராட்டினார்.

இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் தா.செங்கோட்டையன், திருப்பத்தூர் சார்ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன், , மாவட்ட வன அலுவலர் உமேஷ்சோமன், வேலூர் - திருவண்ணாமலை ஆவின் தலைவர் த.வேலழகன், திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் திருஆ.ரா.சிவராமன், இணை இயக்குநர் மருத்துவம் டாக்டர்.இ.கலிவரதன், ஊரக வளர்ச்சி முகமை செயற் பொறியாளர் வ.ராஜவேலு, இணை இயக்குநர் வேளாண்மை (பொ) பு.வாசுதேவரெட்டி, தோட்டக்கலை இணை இயக்குநர் எஸ்.எஸ்.பொண்ணு, ஊராட்சிகள் உதவி இயக்குநர் எஸ்.பிரேம்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஊராட்சிகள் பிச்சாண்டி, கலை பண்பாட்டுத்துறை மண்டல உதவி இயக்குநர் சு.குமார், வட்டாட்சியர் டீ.ஸ்ரீராம், கால்நடை இணை இயக்குநர் அ.அர்த்தனாரி, துணை இயக்குநர் மரு.மனோகரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ், ஒ.கு.வ.திட்டம் திட்ட அலுவலர் சு.பாக்கியராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) சு.குணசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ.) டி.இளவரசன், வட்டாட்சியர் ஸ்ரீராம், வட்டார மருத்துவ அலுவலர் மரு.ப.சுமதி மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் மக்கள் தொடர்பு அலுவலர் ச.இளங்கோ வரவேற்புரையாற்றினார்.இவ்விழாவில் மாவட்ட சுற்றுலா அலுவலர் வின்சென்ட் ஐhன் பிரிட்டோ அவர்கள் நன்றியுரையாற்றினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து