முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலை கோஆப்டெக்ஸில் வைகாசி மாத விற்பனை ரூ. 17 லட்சம்: மேலாளர் ராஜேந்திரன் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 28 மே 2017      திருவண்ணாமலை

 

திருவண்ணாமலை திருவூடல் தெருவில் அமைந்துள்ள பவுர்ணமி கோ-ஆப்டெக்ஸ் வைகாசி மாத விற்பனை ரூ. 17 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுகுறித்து விற்பனை நிலைய மேலாளர் ராஜேந்திரன் கூறுகையில், வைகாசி மாதத்தில் அதிக முகூர்த்த நாள் இருப்பதால் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் வைகாசி மாத சிறப்பு விற்பனையை தொடங்கியது.

சிறப்பு விற்பனை

கடந்த 15ந் தேதி முதல் நேற்றுவரை ரூ. 17 லட்சத்து 96 ஆயிரத்து 400 வரை ஜவுளி ரகங்கள் விற்பனை ஆகியுள்ளன. வைகாசி மாத சிறப்பு விற்பனையாக சிறந்த வடிவமைப்புடன் கூடிய புதிய பட்டுபுடவைகள் வந்துள்ளன. ராஜாராணி டிசைன்ஸ், சரித்திரா சேலைகள், சித்தன்னவாசல் சிற்ப கலையுடன் கூடிய பட்டுபுடவைகள், மணமகள் விரும்பும் கல்பதித்த பட்டு புடவைகள் ஜக்கார்டு டிசைன் பட்டுபுடவைகள், மென்பட்டு சேலைகள் என ஏராளமான ரகங்கள் விற்பனைக்காக வந்துள்ளன. ரூ. 2 ஆயிரத்து 800 தொடங்கி ரூ. 60 ஆயிரம் மதிப்பிலான சேலைகள் உள்ளன. அனைத்து ரகங்களுக்கும் அரசு சார்பில் 20 சதவீத தள்ளுபடி உண்டு. காஞ்சிபுரம், ஆரணி, சேலம், கோயம்பத்தூர், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கைதேர்ந்த பட்டு நெசவாளர்களைக் கொண்டு முகூர்த்த பட்டுசேலைகள், அசல் சரிகை சேலைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

பெண்கள் மனம் கவரும் மங்கலகரமான பட்டு சேலைகள் நியாயமான விலையில் அரசு தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் நம்பிக்கையுடன் இங்கு வாங்கலாம். மேலும் பருத்தி புடவைகள், சேலம், நெகமம், கோவை, மதுரை, பரமக்குடி போன்ற ஊர்களில் நெய்யப்பட்டு கலைநயத்துடன்கூடிய காட்டன் புடவைகளும் இளம் வயதினர் விரும்பும் சுடிதார், நைட்டிகள், ரெடிமேட் சர்ட்டுகள், மாப்பிள்ளை செட், குட்டீஸ் விரும்பும் கார்ட்டூன் படுக்கை விரிப்புகள் திருக்குறள் முதல் சங்க இலக்கியம், சாலை விழிப்புணர்வு, அறிவியல கண்டுபிடிப்பு என அனைத்து படுக்கை விரிப்புகளும் விற்பனைக்காக வந்துள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து