முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டூர் அணையில் முதன் முதலாக தூர்வாரும் பணி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 28 மே 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : 83 ஆண்டுகளுக்கு பின்னர் முதன்முதலாக மேட்டூர் அணையில் தூர் வாரும் பணியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கிவைத்தார். இதன் மூலம் 1 லட்சம் கன மீட்டர் வண்டல் மண்ணை பயன்படுத்த விவசாயிகள் இலவசமாக ஏற்றிச்சென்றனர்.

தமிழ்நாட்டில் நிலவும் கடுமையான வறட்சியின் காரணத்தினால் ஏரி மற்றும் நீர்நிலைகள் போதியநீரின்றி வறண்டு காணப்படுகின்றன. இச்சூழ்நிலையை பயன்படுத்தி,நீர்நிலைகளை தூர்வாரி, அதன் கொள்ளளவை அதிகப்படுத்தி, வருங்காலத்தில்விவசாயப் பணிகளை மேம்படுத்திட, பயனீட்டாளர்களின் உதவியுடன் பண்டையகுடிமராமத்து திட்டத்திற்கு புத்துயிர் அளித்து, ரூபாய் 100 கோடி செலவில் 30 மாவட்டங்களில் 1519 பணிகளை செயல்படுத்திடும் விதமாக, முதலமைச்சர் .எடப்பாடி கே. பழனிசாமியால் காஞ்சிபுரம்மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், மணிமங்கலம் ஏரியில் குடிமராமத்து திட்டப் பணிகள்தொடங்கி வைக்கப்பட்டு, ஒரு மக்கள் இயக்கமாக மாநிலம் முழுவதும் இத்திட்டம்செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ரூ.300 கோடி

மேலும், 2017-18ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்காக ரூ. 300 கோடி ஒதுக்கப்பட்டு 2065 பணிகள் செயலாக்கத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும். பெருகிவரும் நீர்த்தேவையை சமாளிக்க மழைநீரை வீணாக்காமல் சேமிக்க வேண்டியது அவசியமாகிறது. அதன் ஒருபகுதியாக, மாநிலத்தில் உள்ளநீர்நிலைகளான அணைகள், வாய்க்கால்கள் மற்றும் ஏரிகளில் படிந்துள்ள வண்டல்மண்ணை அகற்றி நீர் கொள்ளளவை

தமிழக அரசு ஆணை:

மீளப் பெறும் சீரிய திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பராமரிப்பில் உள்ள ஏரி,கால்வாய் மற்றும் நீர்த்தேக்கம் ஆகிய பகுதிகளிலிருந்து தூர்வாரும்போது எடுக்கப்படும்வண்டல்மண் மற்றும் களிமண் விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளர்கள் மற்றும்பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கட்டணமின்றி மாவட்ட ஆட்சித் தலைவர் அனுமதிபெற்று எடுத்து செல்ல அனுமதி வழங்கி கடந்த ஏப்ரல் 27.ம்தேதி அரசாணைவெளியிடப்பட்டது.

கட்டணம் இல்லை

அதன்படி, விவசாயிகள் நஞ்சை நிலங்களுக்கு ஒரு ஏக்கருக்கு 75 கனமீட்டருக்கு (25 டிராக்டர் லோடுகள்) மிகாமலும், புஞ்சை நிலங்களுக்கு ஒரு ஏக்கருக்கு 90 கனமீட்டர் (30 டிராக்டர் லோடுகள்) மிகாமலும், நீர்நிலைகளிலிருந்துவண்டல்மண் எடுத்துச்செல்ல விதிகளில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மண்பாண்டத் தொழிலாளர்கள் தங்கள் தொழிலுக்காக கூடுதலாக60 கனமீட்டருக்கு மிகாமல் களிமண்ணையும், பொதுமக்கள் தங்கள் சொந்தபயன்பாட்டிற்காக 30 கனமீட்டருக்கு மிகாமல் வண்டல் மண், சவுடுமண், சரளைமண் ஆகியவற்றை கட்டணமில்லாமல் எடுத்துக்கொள்ள அனுமதிவழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் இதுவரை மாநிலத்திலுள்ள மொத்தம் 42,115 நீர்நிலைகளில் 36,345 நீர்நிலைகளிலிருந்து வண்டல் மண்ணை எடுத்துச் செல்ல மாவட்ட ஆட்சித் தலைவர்களால் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 9,986 நீர்நிலைகளிலிருந்து 44,10,472 கனமீட்டர் வண்டல் மண் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. 86,355 விவசாய பெருமக்கள் உள்ளிட்ட பயனீட்டாளர்கள் இதன்மூலம் பயனடைந்துள்ளனர்.

முதல் முறையாக

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணை காவிரியாற்றின் குறுக்கே1925-ஆம் ஆண்டு தொடங்கி 1934-ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. தமிழகத்தின்மிகப் பெரிய அணையான மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டு 83 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இதுவரை ஒருமுறை கூட மேட்டூர் அணையில் தூர்வாரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மாநிலமெங்கும் செயல்படுத்தப்பட்டுவரும் நீர்நிலைகளைத் தூர்வாருதல் திட்டத்தின்படி மேட்டூர் அணையில் தூர்வாரும் பணியினை செயல்படுத்தும் விதமாக, மேட்டூர் அணை நீர்த்தேக்கப் பகுதியின் வலதுகரைப்பகுதியில் அமைந்துள்ள மூலக்காடு, கொளத்தூர் மற்றும் பண்ணவாடி கிராமங்களிலும்,மேட்டூர் அணை நீர்த்தேக்கப் பகுதியின் இடதுகரைப் பகுதியில் அமைந்துள்ள கூணான்டியூர் மற்றும் கோனூர் (மேற்கு) ஆகிய கிராமங்களிலும் தூர்வாரும்போது எடுக்கப்படும் வண்டல் மண்ணில் முதற்கட்டமாக ஒரு லட்சம் கனமீட்டர் வண்டல் மண்ணை விவசாயிகள் கட்டணமின்றி எடுக்க தமிழ்நாடு அரசால் அனுமதிவழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழக வரலாற்றில் முதல்முறையாக மேட்டூர் அணையில் தூர்வாரும் பணியினை முதலமைச்சர் .எடப்பாடி கே. பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்கள். இதன்மூலம் மேட்டூர் அணையின் கொள்ளளவு அதிகரிப்பதுடன், விவசாயத்திற்கு தேவையான நீர்வளமும் அதிகரிக்கும்.

அமைச்சர்கள்- அதிகாரிகள்

இந்த நிகழ்ச்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் . பி.தங்கமணி, உயர்கல்வித்துறை அமைச்சர்.கே.பி.அன்பழகன், சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறைஅமைச்சர் டாக்டர் வி. சரோஜா, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுத்துறைமுதன்மைச் செயலாளர். சிவ் தாஸ் மீனா, பொதுப்பணித் துறை முதன்மைச்செயலாளர் எஸ்.கே. பிரபாகர், முதன்மைச் செயலாளர்/வருவாய் நிர்வாகஆணையர் முனைவர் கொ. சத்யகோபால் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர்வி. சம்பத், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் மற்றும் விவசாய பெருமக்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து