முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கள்ளழகர் கோவில் வசந்த உற்சவ விழா

ஞாயிற்றுக்கிழமை, 28 மே 2017      மதுரை
Image Unavailable

 அழகர்கோவில்-திருமாலிருஞ்சோலை என்றும், தென்திருப்பதி என்றும் போற்றி அழைக்கப்படுவது மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலாகும். இக் கோவிலில் ஒவ்வொரு மாதமும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வைகாசி மாதம் வசந்த உற்சவ விழா நடைபெறும். இந்த விழா வருகிற 31ந் தேதி புதன்கிழமை மாலையில் தொடங்குகிறது. இதில் கோவில் உள் பிரகாரத்திலிருந்து ஸ்ரீதேவி பூமிதேவியருடன் கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள் பல்லக்கில் எழுந்தருளி புறப்பாடு நடைபெறும். தொடர்ந்து மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் சுவாமி,தேவியருடன் புறப்பாடாகி கோவிலின் தென்பகுதியில் உள்ள  வசந்த மண்டபத்திற்கு போய் எழுந்தருள்வார். அங்கு விசேஷ பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெறும். அப்போது ஏராளமான பக்தர்கள் அங்கு குவிந்து தரிசனம் செய்வார்கள். பின்னர் வந்த வழியாகவே சுவாமி கோவிலுக்குள் சென்று  இருப்பிடம் சேருகிறார். இதைபோலவே தினமும் மாலையில் இதே போன்று 10 நாட்களும் நடைபெறும்.  ஜுன் 9ந் தேதி பவுர்ணமி நிறை நாளன்று  இந்த விழா நிறைவு பெறும்.
     இந்த விழா குறித்து கோவில் பணியாளர் ஒருவர் கூறியதாவது: ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடைபெறும் இந்த வசந்த உற்சவ விழா தனிப்பெரும் சிறப்புடையது ஆகும். சுந்தரராஜபெருமாள் தேவியருடன் வசந்த மண்டபத்திற்கு போய் வருவது கோடை காலத்தின் வெப்பநிலையை தணிக்கும் பொருட்டும், பருவமழை பெய்து பூமி செழித்து விவசாயத்தில் அதிக மகசூல் கிடைக்கும், நாடு சுபிட்ஷம் பெறும்என்ற ஐதீக நம்பிக்கை உள்ளது. மேலும் அழகர்மலையின் மூலிகை காற்றுகள் அந்த மாலை நேரத்தில் வசந்தமண்டபம் மட்டும் அல்லாமல் கோவில் பிரகாரங்களிலும் வீசும். இவ்வாறு அவர் கூறினார். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து