முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய சட்டக்கல்லூரி வகுப்புகள் தொடங்க துரித நடவடிக்கை ராமநாதபுரத்தில் அமைச்சர் மணிகண்டன் இடத்தினை ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 28 மே 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,-ராமநாதபுரத்தில் புதிய சட்டக்கல்லூரி அமைப்பதற்கான இடத்தினை அமைச்சர்டாக்டர் மணிகண்டன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
 ராமநாதபுரத்தில் புதிய அரசு சட்டக்கல்லூரி வகுப்புகள் தற்காலிகமாக நடப்பதற்கு  உரிய இடம் தேர்வு செய்யும் பணிகளை கலெக்டர் முனைவர் நடராஜன் முன்னிலையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் பேசியதாவது:- இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் மறைந்த  தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்கள்.  அவர்கள் காட்டிய வழியினை பின்பற்றி செயல்படும் தமிழ்நாடு அரசு ஜெயலலிதா செயல்படுத்திய அனைத்து மக்கள் நலத்திட்டங்களையும் தொடர்ந்து சிறப்புடன் செயல்படுத்தி வருகின்றது. குறைந்த செலவில் தரமான சட்டக் கல்வியை மாநிலம் முழுவதும் உள்ள மாணவர்களுக்கு வழங்கிட ஏதுவாக தமிழகத்தில் படிப்படியாக போதிய எண்ணிக்கையிலான அரசு சட்டக் கல்லூரிகளை நிறுவுவதற்கு தமிழ்நாடு அரசு தீர்;மானித்ததின் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நீண்டநாள் கோரிக்கையாக இருந்துவந்த சட்டக்கல்லூரி அமைப்பதற்கான கோரிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் ராமநாதபுரம் மாவட்ட மக்களின் சார்பாக என்னுடைய கோரிக்கையை ஏற்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு புதிதாக ஒரு சட்டக்கல்லூரி 2017-18-ஆம் கல்வியாண்டில் துவங்கப்படும் என அறிவித்திருந்தார்கள்.
 புதிய அரசு சட்டக்கல்லூரிக்குத் தேவையான ஆசிரியர்கள், நூலகப் புத்தகங்கள், அறைகலன்கள் மற்றும் இதர தேவைகளுக்கு ரூ.2 கோடியே 27 லட்சம் செலவினம் ஏற்படும் எனவும் அறிவித்திருந்தார்கள்.  இப்புதிய சட்டக்கல்லூரியில் 2017-18ம்  கல்வியாண்டில், முதல் 3 ஆண்டு சட்டப்படிப்பிற்கு முதலாம் ஆண்டில் 80 மாணவர்களும், 5 ஆண்டு சட்டப்படிப்பிற்கு முதலாம் ஆண்டில் 80 மாணவர்களும் பயிலும் வண்ணம் சேர்க்கை நடைபெறும்.  இப்புதிய சட்டக் கல்லூரி நிறுவுவதற்கான ஆரம்பக் கட்டப்பணிகளை மேற்கொள்வதற்காக தனி அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய அரசு சட்டக்கல்லூரியில் 2017-18-ம் கல்வியாண்டில் கல்வி பயில்வதற்கு தற்காலிக இடத்தேர்வு செய்திட ஏதுவாக சக்கரக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளிக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் உரிய இடவசதி குறித்து ஆய்வு செய்யப்பட்டது.  மேலும் பெருங்குளம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் உரிய இட வசதி குறித்தும் தனி அலுவலர் ஆகியோருடன் கலந்து ஆலோசித்து தற்காலிக இடம் தேர்வு செய்து சட்டக்கல்லூரி நடத்தப்படும்.  ஜுலை முதல் வாரத்தில் சட்டக் கல்லூரி வகுப்புகள் துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.  இந்த ஆய்வின்போது, வருவாய் கோட்டாட்சியர் பேபி, ராமநாதபுரம் வட்டாட்சியர் நா.சண்முகசுந்தரம்  மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து