முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீடித்த மானாவாரி சாகுபடிக்கான திட்டத்தினை விவசாயிகள் பயன்படுத்த விருதுநகர் கலெக்டர் சிவஞானம் வேண்டுகோள்

திங்கட்கிழமை, 29 மே 2017      விருதுநகர்
Image Unavailable

  விருதுநகர்.- மானாவாரி சாகுபடியினை மேம்படுத்துவதற்கு தமிழக அரசு “நீடித்த மானாவாரி சாகுபடி இயக்கம்” என்ற திட்டத்தை 2016-17 முதல் 2019-20 வரை 4 ஆண்டுகளில் செயல்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.  அதன்படி  விருதுநகர் மாவட்டத்தில் தலா 1000 ஹெக்டேர் பரப்பு கொண்ட 8 தொகுப்புகள் தேர்வு செய்யப்பட்டு முதல் கட்டமாக நடப்பாண்டில் 8  தொகுப்புகளில் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
             இத்திட்டத்தில், வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் நுழைவு கட்டப் பணிகள், கோடை உழவு, மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகள், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் அமைத்தல் ஆகிய  பணிகள்  மேற்கொள்ளப்படவுள்ளது.
நுழைவுக் கட்டப் பணிகள்
         மானாவாரி நிலங்களில் நுழைவு கட்ட செயல்பாடுகளாக தேர்வு செய்யப்பட்ட மானாவாரி நிலத்தொகுப்பில் அதற்கான மேம்பாட்டுக்குழு மற்றும் விவசாயிகளின் ஆலோசனைகளின்படி, தடுப்பணைகள், கிராம குளங்கள் போன்ற மழை நீர் சேமிப்பு கட்டமைப்புகள் வேளாண்மைப் பொறியியல்  துறை மூலம் அமைக்கப்படும். ஒவ்வொரு தொகுப்பிலும் ரூ.5.00 இலட்சம் மதிப்பிலான  மழை நீர் சேமிப்பு கட்டடைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
மானாவாரி  நிலத்தொகுப்புகளில்  கோடை  உழவுப்  பணிகள்
           வறட்சி காரணமாக மேல் மண் இறுகியிருக்கும் நிலையில், ஐந்து கொத்து கொழுக்கலப்பை மூலம் முகடும் வாய்க்;காலுமான முறையில் உழவு செய்யப்பட்டு, கோடை மழையை அதிக அளவில் வயல்களில் தேக்கி மண்ணின் ஈரப்பதத்;தை அதிகரித்து, நிலத்தின் உற்பத்தி திறனை அதிகரிக்க முடியும். மேலும் கோடை உழவின் மூலம்; களைகளும், மண்ணில் உள்ள தீமை செய்யும் புழுக்களும், புழுக்களின் முட்டைகளும் பெருமளவில் அழிக்கப்படுகிறது. மானாவாரி தொகுப்பு நிலங்களில் உழவுப்பணி மேற்கொள்ள ஹெக்டேருக்கு பின்னேற்பு மானியமாக ரூ.1250.00 வீதம் வழங்கப்பட உள்ளது.
           தேர்வு செய்யப்பட்ட மானாவாரி நிலத்தொகுப்பில் உள்ள விவசாயிகள் சிட்டா, அல்லது நில ஆவணங்களுடன் விண்ணப்பத்தை  வெம்பக்கோட்டை, சிவகாசி மற்றும்  சாத்தூர் வட்டார  விவசாயிகள்  உரிய படிவத்தில் கிருஷ்ணன் கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகம் எதிரில் உள்ள  உதவி செயற் பொறியாளர்(வே.பொ) அலுவலத்திலும்   அருப்புக்கோட்டை, விருதுநகர், காரியாபட்டி, திருச்சுழி  வட்டார  விவசாயிகள்  உரிய படிவத்தில் மாவட்ட ஆட்சியர்  வளாகத்தில்  உள்ள  உதவி செயற் பொறியாளர்(வே.பொ), விருதுநகர்  அலுவலத்திலும்  அளிக்க வேண்டும். விவசாயி, அவரது சொந்த செலவில் ஐந்து கொத்து கொழுக்கலப்பை மூலம் இயந்திர உழவு மேற்கொள்ள வேண்டும். உழவுப் பணியினைத் துறையின் அலுவலர்கள் முன்னிலையில் மேற்கொண்டு பணியை புகைப்படம் எடுத்தல் வேண்டும். உழவுப்பணி  மேற்கொண்டதை உறுதி செய்து சம்மபந்தப்பட்ட உதவி பொறியாளர்கள் அல்லது இளநிலைப் பொறியாளர்கள் சான்று வழங்குவர். உழவுப்பணி  மேற்கொள்ளப்பட்டதை தொடர்புடை விவாசயியும், துறையின் உதவி பொறியாளர் அல்லது இளநிலை பொறியாளர் ஒப்புதல் சான்றிட்ட படிவம் பட்டியல்  கேட்பாக கருதப்படும். இதனை  வேளாண்மைப் பொறியியல் துறை  உபகோட்;;ட உதவி செயற் பொறியாளர் ஆய்வு செய்து உண்மைத்தன்மைக்கான சான்று வழங்கியபின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு மேம்பாட்டு குழுக்களின் தொடக்க வேளாண்மை  கூட்டுறவு  சங்கங்கள் மூலம் பயனாளிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில்  மானியம்  பின்னேற்பாக செலுத்தப்படும்.
மானாவாரி நிலங்களில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் அமைத்தல்
              இத்திட்டத்தின் கீழ் மானாவாரி நிலத்தொகுப்பு மேம்பாட்டு குழுக்கள் மூலம் விவசாயிகளை கலந்தாலோசித்து ஏதுவான இடங்களில் மழை நீர் சேமிப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்பட உள்ளன. தேர்வு செய்யப்பட்ட  தொகுப்புகளில்  உள்ள மானாவாரி  நிலங்களில்  தடுப்பணைகள், கசிவு நீர்; குட்டைகள் மற்றும் கிராம குளங்கள் போன்ற மழை நீர் சேமிப்பு  கட்டமைப்புகள் அமைக்கப்படவுள்ளன.
               மேற்கண்ட கட்டமைப்புகளில்  விவசாய நிலங்களிலிருந்து வழிந்தோடி வரும் மழை நீர் தாழ்வான  பகுதியில் சேகரிக்கப்பட்டு, நிலத்தடி நீரை பெருக்கவும், மழைக்குறைவு காலங்களில்  பயிர்களுக்கு உயிர்பாசனம் அளிக்கவும், கால்நடைகளின்  குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும் முடியும். ஓவ்வொரு தொகுப்பிலும்  ரூ.7.50 இலட்சம் மதிப்பில்  மழை நீர் சேமிப்பு கட்டமைப்புகள் அமைக்கப்படவுள்ளது.
வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் அமைத்தல்
 பண்ணை இயந்திரங்களின்  உபயோகத்தை அதிகப்படுத்தும் விதமாக ஒவ்வொரு தொகுப்பிற்கும்  தலா ஒரு வேளாண் கருவிகள் வாடகை  மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.  ஒவ்வொரு  மையத்திற்கும்  ரூ.10.00 இலட்சம்  மதிப்பிலான வேளாண் இயந்திரங்கள்   மற்றும்  கருவிகள்  வாங்க  அனுமதிக்கப்படும்.  இதில்  ரூ.8.00 இலட்சம்  வரை அரசு மானியமாக  வழங்கப்படும்.
வேளாண் இயந்திரங்கள்  மற்றும்  கருவிகளின் வாடகை மையங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் குறைந்தது 8 விவசாயிகள் அடங்கிய விவசாய குழுக்கள் அல்லது உழவர் உற்பத்தியாளர்கள் அமைப்புகள் போன்றவற்றின் மூலம் ஏற்படுத்தப்படும். மேற்படி குழுக்கள்  அல்லது  அமைப்புகள் தங்களின் சொந்த தேவைக்கு மட்டும்  மேற்குறிப்பிட்ட வேளாண் இய்நதிரங்களையும், கருவிகளையும்  வாடகையின் அளவு சந்தை நிலவரத்திற்கு குறைவாக நிர்ணயிக்க வேண்டும்.
எனவே, நீடித்த மானாவாரி சாகுபடிக்கான திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் மேற்படி பணிகளை விவசாயிகள் நன்கு பயன்படுத்தி   பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.
       
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து