முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனியாரிடமிருந்து பாலை கொள்முதல் செய்து தமிழக அரசு சோதனைக்கு உட்படுத்த வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 29 மே 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, தமிழக அரசே தனியாரிடம் இருந்து பாலை முழுமையாக கொள்முதல் செய்து அதனை முழு சோதனைக்கு உட்படுத்திய பிறகே விற்பனைக்கு கொண்டுவர வேண்டும் என்று த.மா.கா தலைவர் வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது , ''தமிழகத்தில் அரசின் ஆவின் பால் உட்பட பல்வேறு தனியார் நிறுவனத்தின் பால் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் உள்ள பொது மக்கள் அரசு விற்கும் பாலை வாங்குவதை விட தனியார் நிறுவனப் பாலையே பெரும்பாலும் சார்ந்திருக்கின்றனர். தமிழகத்தில் பிற மாநிலத்தைச் சேர்ந்த தனியார் பால் அதிக அளவில் விற்கப்படுகிறது. தமிழகத்தில் விற்கப்படும் மொத்த பாலில் சுமார் 33 சதவீதம் பாலில் கலப்படம் இருப்பதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

ரசாயணம் கலப்பால் நோய்கள் உண்டாகும்

கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக பால்வளத்துறை அமைச்சர் தமிழகத்தில் விற்கப்படும் தனியார் பாலில் ரசாயனம் கலந்துள்ளதாகவும், அது சம்பந்தமாக தனியார் பால் நிறுவனங்களை கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார். இவ்வாறு பாலில் ரசாயணம் கலந்திருப்பதால் நோய்கள் உண்டாகும் எனவும் கூறியிருக்கிறார். இச்செய்தி மிகவும் அதிர்ச்சியளித்தது.

காரணம் பால் அன்றாட அவசிய உணவுப் பொருள். இதனை குழந்தை முதல் முதியோர் வரை அன்றாடம் பல நேரங்களில் பயன்படுத்துகின்றனர். நாள் தோறும் உணவகங்களிலும் பாலின் மூலம் தயாரிக்கப்படும் டீ, காபி, பால், பால் பொருட்கள் ஆகியவை அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது தமிழக பால்வளத்துறை அமைச்சர் கூறியது போல தனியார் பாலில் ரசாயனம் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த பாலை விற்க தடை செய்ய வேண்டும். அவ்வாறு பாலில் கலப்படம் இல்லையென்றால் அதனையும் உடனடியாக பொது மக்களுக்கு அறிவிக்க வேண்டும்.
காரணம் பாலில் கலப்படம் என்று கூறியதால் மக்கள் மத்தியில் பால் சம்பந்தமாக ஏற்பட்டுள்ள சர்ச்சையால், தனியார் பாலை வாங்கவா, வேண்டாமா என்ற குழப்பமான, அச்ச நிலையில் மக்கள் உள்ளனர்.

உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டும்

மேலும் தமிழக அரசின் ஆவின் பாலும் பொது மக்களின் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்யமுடியாது. இச்சூழலில் தனியார் பாலை வாங்க வேண்டிய கட்டாயத்தில் மக்கள் இருக்கிறார்கள். எனவே தமிழக பால்வளத்துறை அமைச்சர் பாலில் கலப்படம் உண்டு, இல்லை என்பதை தெளிவாக சோதனைக்கு உட்பட்டு, கண்காணிப்பின் மூலம், தொடர் விசாரணை மேற்கொண்டு மக்களுக்கு உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டும்.

தற்போதைய சூழலில் தனியார் பாலில் கலப்படம் இருப்பது உறுதி செய்யப்பட்டால் தமிழக அரசே தனியாரிடம் இருந்து பாலை முழுமையாக கொள்முதல் செய்து அதனை முழு சோதனைக்கு உட்படுத்திய பிறகே விற்பனைக்கு கொண்டுவர வேண்டும்.

மேலும் தமிழக அரசு - பால்வளத்துறை, சுகாதாரத்துறை, பால் முகவர்கள் கொண்ட குழு ஒன்றை மாவட்டம் தோறும் அமைத்து தரமான பால், கட்டுப்பாடான விலையில், தட்டுப்பாடின்றி பொதுமக்களுக்கு கிடைப்பதற்கு வழிவகைச் செய்ய வேண்டும்'' என்று வாசன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து