முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் மருத்துவமனையில் அனுமதி

திங்கட்கிழமை, 29 மே 2017      இந்தியா
Image Unavailable

திருவந்தபுரம், கேரள முன்னாள் முதல்வரும், நிர்வாக சீர்திருத்த ஆணைக்குழுத் தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் ரத்த அழுத்த மாறுபாடு மற்றும் சுவாசப் பிரச்சினை காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து பேசிய அச்சுதானந்தனின் தனிப்பட்ட மருத்துவரும், இதய நிபுணருமான பரத் சந்திரன், ''அச்சுதானந்தன் கடந்த இரண்டு நாட்களாக தீவிர ரத்த அழுத்த மாறுபாட்டால் அவதிப்பட்டார்.இதனால்  உடல்நிலை மோசமடைந்தது.

அதைத் தொடர்ந்து உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ஏற்கெனவே இருந்த மூச்சுக்குழாய் பிரச்சினையால் அவர் சுவாசிக்கச் சிரமப்பட்டது தெரியவந்தது. இப்போது அவரின் உடல்நிலை சீராக உள்ளது. விரைவில் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து பொதுப்பிரிவுக்கு மாற்றப்படுவார்.

அச்சுதானந்தன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடனேயே கேரள முதல்வர் பினராயி விஜயன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரின் உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தார்'' என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து