முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திறன் கொண்ட ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் ஜூன் மாதம் விண்ணில் பாய்கிறது

திங்கட்கிழமை, 29 மே 2017      இந்தியா
Image Unavailable

ஸ்ரீஹரிகோட்டா, மனிதனை விண்வெளிக்கு சுமந்து செல்லும் திறன் கொண்ட ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் ஜூன் முதல் வாரத்தில் விண்ணில் ஏவப்பட உள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திடம் (இஸ்ரோ), பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி என 2 வகை ராக்கெட்டுகள் உள்ளன. இந்த ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்களை மட்டுமே விண்ணில் நிலைநிறுத்த முடியும். விண்கலத்துடன் மனிதர்களை சுமந்து செல்லும் திறன் கிடையாது.

இதற்காக ஜிஎஸ்எல்வி மார்க் 3 என்ற ராட்சத ராக்கெட்டை இஸ்ரோ தயாரித்துள்ளது. இது 200 யானைகளுக்கு சமமான எடை கொண்டதாகும். கடந்த 2009-ம் ஆண்டில் மார்க் 3 ராக்கெட் தயாரிப்புக்கான பணிகள் தொடங்கப்பட்டு இதுவரை 6 முறை சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.  கடந்த 2014 டிசம்பரில் 3.7 டன் எடை கொண்ட விண்கலத்துடன் மார்க் 3 ராக்கெட் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அப்போது ஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்ட மார்க் 3 நிர்ணயிக்கப்பட்ட உயரத்துக்கு விண்கலத்தைச் சுமந்து சென்று லாவகமாக விடுவித்தது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து வரும் ஜூன் முதல் வாரத்தில் மீண்டும் அதே ராக்கெட் சோதனை நடத்தப்பட உள்ளது. இதற்காக 43.43 மீட்டர் உயரம், 4 மீட்டர் அகலத்தில் ரூ.300 கோடியில் மார்க் 3 ராக்கெட் தயாரிக்கப்பட்டு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் தயார் நிலை யில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ தலைவர் கிரண் குமார் கூறியபோது, ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் இந்திய வீரர் களை விண்வெளிக்கும் அனுப்ப முடியும் என்று தெரிவித்தார். ‘மார்க் 3 ராக்கெட் மூலம் மூன்று வீரர்களை விண்வெளிக்குச் சுமந்து செல்ல முடியும். இதன்மூலம் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திறன் கொண்ட நாடு என்ற பெருமையை இந்தியா பெறும். புதிய ராக்கெட் மூலம் பெண் ஒருவரை விண் வெளிக்கு அனுப்ப திட்டமிடப்பட் டுள்ளது’ என்று இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து