பெசன்ட் நகர் அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளி கொலையில் 5 பேர் கைது

திங்கட்கிழமை, 29 மே 2017      சென்னை

பெசன்ட் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளி கொலை செய்யப்பட்டது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்

கொலை

பெசன்ட் நகர், 3-வது அவின்யூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை பார்த்து வந்தவர் சந்திரன் (வயது 64). கடந்த 26-ந் தேதி இரவு பணியில் இருந்த போது மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார்.இது குறித்து சாஸ்திரி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேளச்சேரியை சேர்ந்த மணிகண்டன், அவரது நண்பர்கள் முரளி கந்தன் மற்றும் ரமேஷ், மனோஜ் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

கைதான மணிகண்டன் அதே குடியிருப்பில் வசிக்கும் ஒருவரிடம் கார் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது ஒரு பெண்ணுடன் அவருக்கு கள்ளக்காதல் ஏற்பட்டு உள்ளது. இது கொலையுண்ட மணிகண்டனுக்கு தெரிந்தது. இதனால் மணிகண்டனை கூலிப்படையினரை ஏவி தீர்த்து கட்டி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக கைதான 5 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து